நின்னு நிதானமாக ஆடிய அருண் கார்த்திக், என்.எஸ்.ஹரிஷ்; நெல்லை 159 ரன்கள் குவிப்பு!

Published : Jul 01, 2023, 09:11 PM IST
நின்னு நிதானமாக ஆடிய அருண் கார்த்திக், என்.எஸ்.ஹரிஷ்; நெல்லை 159 ரன்கள் குவிப்பு!

சுருக்கம்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் ஆடி 159 ரன்கள் குவித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எட்டு அணிகள் இடம் பெற்ற இந்த தொடரில் தற்போது 6 போட்டிகளில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

பரிதாபமாக வெளியேறிய 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை!

இதற்கு மாறாக பா11சி திருச்சி அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வி அடைந்து முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய 23 ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதின.

சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!

இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படிம் முதலில் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் அருண் கார்த்திக் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, என் எஸ் ஹரிஷ் 21 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சன்னி சந்து அதிரடி: சேலம் ஸ்பார்டன்ஸ் 155 ரன்கள் குவிப்பு!

இறுதியாக நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சு தரப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சுபோத் பதி மற்றும் மதிவாணன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கிஷோர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி