சச்சின் ரதி வேகத்தில் காலியான ஓபனிங்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்களில் வெற்றி!

By Rsiva kumar  |  First Published Jul 1, 2023, 7:15 PM IST

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்தது. இதில் இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

சன்னி சந்து அதிரடி: சேலம் ஸ்பார்டன்ஸ் 155 ரன்கள் குவிப்பு!

Tap to resize

Latest Videos

சன்னி சந்து மட்டும் நிலையான நின்று 44 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 61 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் குவித்தது.

ஃபர்ஸ்ட் ஓவரிலேயே 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த ஷாகின் அப்ரிதி!

பந்து வீச்சு தரப்பில் பி புவனேஷ்வரன் 4 ஓவர்கள் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாய் கிஷோர் மற்றும் திரிலோக் நாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அஜித் ராம் மற்றும் கோகுல்மூர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சாய் கிஷோர் 26 ரன்களும், துஷார் ரஹாஜே 22 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உன் குத்தமா, என் குத்தமா? 11 ஓவர்கள் பந்து வீசிய நியூசிலாந்து வீராங்கனை ஈடன் கார்சன்: வேடிக்கை பார்த்த நடுவர்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று ஐடிரீம் திருப்பூர்  தமிழன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று 6ஆவது இடம் பிடித்துள்ளது.

பெண்கள் கரீபியன் பிரீமியர் லீக்கில் இடம் பெற்ற முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்!

click me!