முதல் வெற்றிக்காக போராடும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்: நெல்லை ராயல் கிங்ஸ் உடன் பலப்பரீட்சை!

By Rsiva kumar  |  First Published Jun 20, 2023, 2:05 PM IST

டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டியில் இன்று ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் கடந்த 12 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பல அற்புத நிகழ்வுகளும் இதுவரையில் நடந்த போட்டிகளில் நடந்துள்ளது. இதில், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் கேப்டன் ஒரு ஓவரில் 4 நோபால் மற்றும் ஒரு வைடு உள்பட ஒரு பந்தில் மட்டும் 18 ரன்கள் கொடுத்துள்ளார். இதே போன்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது ஓவரில் பேட்ஸ்மேன் டிஆர் எஸ் கேட்டுள்ளார். அதில் திருப்தி இல்லாத அஸ்வின் மீண்டும் அதே பந்துக்கு டிஆர்எஸ் கேட்டுள்ளார். இறுதியில் நாட் அவுட் வந்துள்ளது.

ரூ.800 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் தோனியின் மாமியார் ஷீலா சிங்!

Tap to resize

Latest Videos

டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசனில் இடம் பெற்றுள்ள 8 அணிகள் 28 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. இறுதியாக முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும். தற்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் 2 போட்டியில் வெற்றி பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளது.

இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியும் 2 போட்டியிலும் தோல்வி கண்டு 8ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று நடக்கும் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று நடக்கும் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு 174 ரன்கள், இங்கிலாந்துக்கு 7 விக்கெட் – யாருக்கு முதல் வெற்றி?

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:

துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), என்.எஸ்.சதுர்வேத், கே விஷால் வைத்யா, எஸ் ராதாகிருஷ்ணன், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், பாலசந்தர் அனிருத், முகமது அலி, ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் (கேப்டன்), எஸ் அஜித் ராம், பி புவனேஸ்வரன், ஜி பெரியசாமி, எஸ் கணேஷ், திரிலோக் நாக், அல்லிராஜ் குப்புசாமி, ஜி பார்த்தசாரதி, எம் ராகவன், ஐ வெற்றிவேல், ராகுல் ஹரீஷ், எஸ் மணிகண்டன்.

சேப்பாக்கத்திற்கு ஆப்பு வச்ச லைகா கோவை கிங்ஸ்: அதிரடி காட்டிய சாய் சுதர்சன் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் நாட் அவுட்

நெல்லை ராயல் கிங்ஸ்:

ஸ்ரீ நிரஞ்சன், அருண் கார்த்திக் (கேப்டன்), அஜிதேஷ் குருசாமி, ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), சோனு யாதவ், எஸ் ஜே அருண் குமார், ஆர் மிதுன், எம் பொய்யாமொழி, எஸ் மோகன் பிரசாத், லக்‌ஷய் ஜெயின், சந்தீப் வாரியர், நிதிஷ் ராஜகோபால், லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், என்.எஸ்.ஹரீஷ், பி சுகேந்திரன், கார்த்திக் மணிகண்டன், இம்மானுவேல் செரியன், என் கபிலன், ஆதித்யா அருண், அஸ்வின் கிரிஸ்ட்,

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!

click me!