இந்திய அணியின் புதிய தலைமைக் குழு தேர்வாளராக 45 வயது நிரம்பிய நீது டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்கள் கிரிக்கெட்டைப் போன்று பெண்கள் கிரிக்கெட்டிற்கும் பிசிசிஐ அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, பெண்கள் கிரிக்கெட் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வுக் குழுவின் நியமனங்களை பிசிசிஐ அறிவித்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை நீதி டேவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு 174 ரன்கள், இங்கிலாந்துக்கு 7 விக்கெட் – யாருக்கு முதல் வெற்றி?
நீது டேவிட் தவிர, பெண்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா ஆகியோரையும் பிசிசிஐ நியமித்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் நியமனத்தின் போது இந்த குழு ஒன்றாக இணைந்து முடிவு எடுப்பார்கள்.
கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் நீது லாரன்ஸ் டேவிட் இந்திய மகளிர் கிரிக்கெட் டீமில் விளையாடியுள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 25 ரன்களும், 41 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 97 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 74 ரன்களும், 141 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!
இதே போன்று ஜூனியர் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தலைமை தேர்வாளராக விஎஸ் திலக் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர, ராந்தேவ் போஸ், ஹர்விந்தர் சிங் சோதி, பதிக் படேல், கிருஷ்ண மோகன் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களது தலைமையிலான குழு தான் ஒன்றாக இணைந்து தான் வீராங்கனைகளை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளாளுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!
மகளிர் தேர்வுக் குழு:
நீது டேவிட் (தலைவர்), ரேணு மார்கரெட், ஆர்த்தி வைத்யா, கல்பனா வெங்கடாச்சார், ஷ்யாமா டி ஷா
ஜூனியர் கிரிக்கெட் கமிட்டி:
வி.எஸ்.திலக் நாயுடு (தலைவர்), ரணதேப் போஸ், ஹர்விந்தர் சிங் சோதி, பதிக் படேல், கிருஷேன் மோகன்.