தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தோனியின் மாமியாரான ஷீலா சிங் இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆசிய கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக் கொடுத்தவர் எம்.எஸ்.தோனி. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். உலக பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஒருவராகவும் இடம் பெற்றுள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.1040 கோடி.
இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு தேர்வாளராக இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை நீது டேவிட் நியமனம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி, மைதானத்திற்குள் வந்தாலே ரசிகர்களின் ஆரவராம் தான் அதிகமாக இருக்கும். ஏராளமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். கிரிக்கெட், விவசாயம், சினிமா என்று கலக்கி வருகிறார். தோனி எண்டர்டெயிண்ட்மெண்ட் என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனியின் மாமியாரான ஷீலா சிங் தான்.
ஆஸ்திரேலியாவுக்கு 174 ரன்கள், இங்கிலாந்துக்கு 7 விக்கெட் – யாருக்கு முதல் வெற்றி?
கடந்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.800 கோடியையும் தாண்டியுள்ளது. இந்நிறுவனத்தின் மூலமாக தமிழில் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம் LGM – Let’s Get Married) என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிஇஓ என்னவோ ஷீலா சிங் தான். ஆனால், இந்த நிறுவனத்தின் பங்குதாரராக சாக்ஷி தோனி தான் இருக்கிறார். தோனியின் மாமியார் ஷீலா சிங் ஒரு ஹவுஸ் மேக்கர். அவரது கணவர், தோனியின் தந்தையுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிலா சிங்கின் கணவர் ஆர்கே சிங் மற்றும் தோனியின் தந்தை பான் சிங் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் கனோய் குழுமத்தின் 'பினாகுரி தேயிலை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடந்த அற்புதங்களின் பட்டியல்!