IND vs AUS: அடுத்தடுத்த பந்தில் கோலி, சூர்யகுமாரை வீழ்த்தினார் மிட்செல் ஸ்டார்க்..! இந்திய அணி தடுமாற்றம்

By karthikeyan VFirst Published Mar 17, 2023, 6:07 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 189 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணி, 16 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். ஆனால் ஸ்மித் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மிட்செல் மார்ஷ் 65 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஜோஷ் இங்லிஸ், லபுஷேன், கேமரூன் க்ரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழக்க, 36வது ஓவரில் வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஃபாஸ்ட் பவுலர்கள் ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நான் அங்கே இருந்து ஓடி வர்றேன்.. அவன் ஈசியா விலகிடுறான்.! அம்பயரிடம் கத்திய ஹர்திக் பாண்டியா.. வைரல் வீடியோ

189 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் இன்னிங்ஸின் 5வது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க், அந்த ஓவரின் 5வது பந்தில் விராட் கோலியையும்(4), கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவையும்(0) அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 16 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில்லுடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். கில் - ராகுல் ஜோடி நிதானமாக ஆடிவருகிறது.
 

click me!