சரவெடியாய் ஆரம்பத்து புஸ்வானமாய் முடிந்த ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்..! முதல் ODI-யில் இந்திய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 17, 2023, 4:43 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இந்திய அணிக்கு 189 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

நான் அங்கே இருந்து ஓடி வர்றேன்.. அவன் ஈசியா விலகிடுறான்.! அம்பயரிடம் கத்திய ஹர்திக் பாண்டியா.. வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபாட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களுக்கு 2வது ஓவரிலேயே வீழ்த்தினார் முகமது சிராஜ். அதன்பின்னர் மிட்செல் மார்ஷும் ஸ்டீவ் ஸ்மித்தும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடினர்.  ஸ்மித் 22 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து சதத்தை நோக்கி ஆடிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களுக்கு ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். 

லபுஷேனும் 15 ரன்களில் குல்தீப் யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சீட்டுக்கட்டாய் சரிந்தது. ஜோஷ் இங்லிஸ்(26), கேமரூன் க்ரீன்(12), ஸ்டோய்னிஸ்(5) ஆகிய மூவரும் ஷமியின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 8 ரன்னுக்கு ஜடேஜாவின் பந்தில் ஆட்டமிழக்க, சீன் அபாட்(0) மற்றும் ஆடம் ஸாம்பா(0) ஆகிய இருவரும் டக் அவுட்டாக, 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

மிட்செல் மார்ஷ் தொடங்கிய விதத்திற்கு ஆஸ்திரேலிய அணி அசால்ட்டாக 300 ரன்களை கடந்திருக்கலாம். ஆனால் மிடில் ஆர்டரின் சொதப்பலால் வெறும் 188 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி 189 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டுகிறது. ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

click me!