ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் மூலமாக ஹர்திக் பாண்டியா முதல் முறையாக ODI கேப்டனாக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போன்று தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடி வருகிறது. தனது மைத்துனனுக்கு திருமணம் என்பதால், இந்தப் போட்டியில் மட்டும் ரோகித் சர்மா விளையாடவில்லை. வரும் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் 2ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் மூலமாக முதல் முறையாக ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் அவரது தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், 50 ஓவர்கள் உலகக் கோப்பை தொடருக்கு பின்னதாக நடக்கும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களுக்கு கண்டிப்பாக ஹர்திக் பாண்டியா முழு நேர கேப்டனாக செயல்பட வாய்ப்பு உண்டு என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருந்தார்.
டி20 போட்டி கேப்டன்: 11
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் முதல் முறையாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இந்த சீசனில் அவரது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியனானது. இதன் காரணமாக கடந்த ஆண்டு நியூசிலாந்து சென்ற இந்திய அணிக்கு டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கு கேப்டனாக செயபட்டார். இதுவரையில் 11 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா 8 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளார். 2 போட்டிகளில் தோல்வியை தழுவினார். ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.
இந்தியாவுக்கு பதிலடி உண்டு: ஸ்கெட்ச் போட்டு தூக்க தயார் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர் பேட்டி!
டி20 கேப்டன் - 11
வெற்றி - 8
தோல்வி - 2
டை - 1
கேப்டனாக தொடரை கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா:
இதுவரையில் 4 சீரிஸ்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
சீரிஸ் வெற்றி - 4
ஒயிட் வாஷ் - 1
ஹர்திக் பாண்டியா - எதிரணி
இலங்கை - 3 போட்டி - 2 வெற்றி - ஒரு தோல்வி
நியூசிலாந்து - 5 போட்டி - 3 வெற்றி - 1 தோல்வி - ஒரு போட்டி டை
வெஸ்ட் இண்டீஸ் - 1 போட்டி - ஒரு போட்டி வெற்றி
அயர்லாந்து - 2 போட்டி - 2 போட்டி வெற்றி
டி20 போட்டி இந்திய கேப்டன்கள் சாதனை:
கேப்டன் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டை | முடிவு இல்லை |
எம்எஸ் தோனி | 72 | 41 | 28 | 1 | 0 |
ரோகித் சர்மா | 51 | 39 | 12 | 0 | 0 |
விராட் கோலி | 50 | 30 | 16 | 2 | 2 |
ஹர்திக் பாண்டியா | 11 | 8 | 2 | 1 | 0 |
ரிஷப் பண்ட் | 5 | 2 | 2 | 0 | 1 |