இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இந்த நால்வரில் இருவர் தான்.. அவர்கள் யார்..?

By karthikeyan VFirst Published Feb 17, 2020, 12:10 PM IST
Highlights

இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களில் நான்கு பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவில் தேர்வுக்குழுவின் தலைவர் உட்பட ஐவர் இருப்பர். ஐவர் அடங்கிய அந்த தேர்வுக்குழு தான் இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும்.

எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவில், தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதவிக்காலமும் முடிவடைந்ததையடுத்து, இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள் அந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். 

ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில், அவற்றிலிருந்து நான்கு பேர் மட்டும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய 2 இடங்களுக்கு 4 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்த நால்வரையும் இண்டர்வியூ செய்து அதில் இருவர் தேர்வு செய்யப்படுவர். 

தமிழகத்தை சேர்ந்த லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், அஜித் அகார்கர், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ராஜேஷ் சவுகான் ஆகிய நால்வரும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் இண்டர்வியூ நடத்தப்படும். அவர்களில் இருவர் தேர்வு செய்யப்பட்டு, ஒருவர் தேர்வுக்குழு தலைவராகவும் மற்றொருவர் உறுப்பினராகவும் நியமிக்கப்படுவார். 

Also Read - டிவில்லியர்ஸின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. “Mr 360"-னு ஏன் அழைக்கப்படுகிறார்? இந்த ஃபோட்டோ கேலரியை பாருங்க புரியும்

இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டும் தொடர்ச்சியாக 2 டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக்கூடிய முக்கியமான பொறுப்பு தேர்வுக்குழுவினருக்கு உண்டு. அப்படியான முக்கியமான பொறுப்பிற்கு தேர்வாகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிறியுள்ளது. 

click me!