மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரின் 48ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 48ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
லக்னோ அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குயீண்டன் டி காக் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அர்ஷின் குல்கர்னி அணியில் இடம் பெற்றுள்ளார். மாயங்க் யாதவ்வும் அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, மும்பை இந்தியன்ஸ் அணியில் லூக் உட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி அணியில் இடம் பெற்றுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் கூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹாக், மோசின் கான், மாயங்க் யாதவ்.
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, ஜெரால்டு கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 3 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலாக நடந்த ஒரு போட்டியிலும் லக்னோ வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக நடைபெற்ற 12 போட்டிகளில் 6ல் லக்னோ வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்துள்ளது.