பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த 30 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. அகமதாபாத் மைதானத்தில் நடந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று நடக்கும் 2ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
IPL 2023 CSK: சிஎஸ்கே தோல்விக்கு ஷிவம் துபே தான் காரணமா? இவரெல்லாம் எதுக்கு எடுத்தாங்க?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக பாதி போட்டியில் இடம் பெறமாட்டார். இதன் காரணமாக அவருக்குப் பதிலாக நிதிஷ் ராணா தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் கைப்பற்றிய நிலையில், இந்த தொடர் கொல்கத்தா அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரையில் 30 போட்டிகளில் விளையாடியுள்ளன.
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!
இதில், 20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரையில் பஞ்சாப் அணிக்கு எதிராக கௌதம் காம்பீர் 15 போட்டிகளில் விளையாடி 492 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 72 (நாட் அவுட்) ரன்கள் எடுத்துள்ளார். சுனில் நரைன் 22 போட்டிகளில் விளையாடி பஞ்சாப் அணிக்கு எதிராக 32 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 19 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியதே சிறந்ததாகும்.
IPL 2023: சிக்ஸரை தடுக்க சென்று காலை உடைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!
இதே போன்று பஞ்சாப் அணியின் சார்பாக, விருத்திமான் சகா 10 போட்டிகளில் விளையாடி 322 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 115 (நாட் அவுட்) ரன்கள் ஆகும். பந்து வீச்சில் பியூஷ் சாவ்லா 11 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியதே சிறப்பானதாகும்.
IPL Opening Ceremony: நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா!
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சா, சிக்கந்தர் ராஸா, ஷாருக்கான், சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ரிஷி தவான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
உத்தேச கேகேஆர் அணி:
நாராயண் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.