IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் படைத்த சாதனைகள், 3ஆவது முறையாக தோல்வி - ஒரு பார்வை!

By Rsiva kumarFirst Published Apr 1, 2023, 10:42 AM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில்  3ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி மோசமான சாதனை படைத்துள்ளது.
 

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில், புகழ்பெற்ற இந்திய பாடகர் அரிஜித் சிங், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரது கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. இதையடுத்து 2023 ஆம் ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டி தொடங்கப்பட்டது. இதில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார்.

IPL 2023: சிக்ஸரை தடுக்க சென்று காலை உடைத்துக் கொண்ட கேன் வில்லியம்சன்!

அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது. எப்படியும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீச, அடுத்த 10 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் சேர்த்து 8 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார்.

IPL Opening Ceremony: நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய ராஷ்மிகா மந்தனா!

பின்னர், ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஆவது ஓவரில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக அகமதாபாத் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிய முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த சீசனில் நடந்த 2 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனைகள்:

IPL 2023: ஊ ஆண்டவா, ஊஊ ஆண்டவா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தமன்னா; இருக்கையில் இருந்தே ரசித்த எம் எஸ் தோனி!

1. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அறிமுகம் - இளம் வயதில் அறிமுகமான வீரர் (20 வயது, 141 நாட்கள்)

2. ஐபிஎல் 2023ல் முதல் ரன்னை ருதுராஜ் கெய்க்வாட் எடுத்தார்.

3. ஐபிஎல் 2023ன் 16ஆவது சீசனின் முதல் பவுண்டரியை ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார்.

4. ஐபிஎல் 2023ன் 16ஆவது சீசனின் முதல் சிக்ஸரை ருதுராஜ் கெய்க்வாட் அடித்தார்.

5. சென்னை அணியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்தார்.
அவர், நேற்றைய போட்டியில் மட்டும் 9 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் (11), ராபின் உத்தப்பா (9), பிரெண்டன் மெக்கல்லம் (9), மைக்கேல் ஹஸ்ஸி (9) ஆகியோர் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

6. தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்தவர் ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக, பிரெண்டன் மெக்கல்லம் 158 ரன்கள் (நாட் அவுட்), ரோகித் சர்மா 98 ரன்கள் எடுத்துள்ளனர்.

7. ஒரே அணியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இடம் பிடித்துள்ளார். நேற்றைய போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலமாக 200 சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் தோனி இடம் பிடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் - 239 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
ஏபி டிவிலியர்ஸ் - 238 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
கெரான் போலார்டு - 223 சிக்ஸர்கள் (மும்பை இந்தியன்ஸ்)
விராட் கோலி - 218 சிக்ஸர்கள் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
எம் எஸ் தோனி - 200 சிக்ஸர்கள் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

8. கிரிக்கெட்டில் முதல் மாற்று வீரர்: (இம்பேக்ட் பிளேயர் ஐபிஎல் 2023) - துஷார் தேஷ்பாண்டே

7ஆவது வீரராக சாதிக்க காத்திருக்கும் எங்க தல தோனி; இன்னும் 22 ரன்கள் தான்!


சோதனைகள்:

  • ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசனில் முதல் தோல்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்துள்ளது.
  • குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹோம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
  • அகமதாபாத் மைதானத்தின் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது.
  • நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 3ஆவது தோல்வியை பதிவு செய்துள்ளது. நடந்தது 3 போட்டி தான். 3 போட்டியிலும் சென்னை தோல்வி கண்டுள்ளது.
click me!