பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது.
விறுவிறுப்பான கட்டத்தை ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஏன், டெல்லி அணிக்கு கூட பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் கைவசம் இருக்கிறது. ஆனால், அதற்காக அந்த அணி இனி நடக்கும் எல்லா போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். சென்னைக்கு எதிரான போட்டியிலும் கூட ஜெயிக்க வேண்டும்.
ஆர்சிபிக்கு எதிராக ஹீரோவான பிலிப் சால்ட் - ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்யும் பிருத்வி ஷா!
நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணிக்கு ப்ராப்சிம்ரன் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்ஷா டக் அவுட்டில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற கடைசி வரை போராடிய ஷிகர் தவான் 57 ரன்கள் அடித்துக் கொடுத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் நடந்த சுவாரஸ்யம்: 7 பந்துக்கு ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளென் பிலிப்ஸ்!
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் குர்பாஸ் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 11 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு புறம் கேப்டன் தனது பொறுப்பை உணர்ந்து அணிக்கு 51 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். அப்போது கேகேஆர் அணி 15.1 ஓவர்களில் 124 ரன்கள் எடுத்திருந்தது. கேகேஆர் வெற்றிக்கு 29 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்பட்ட போது ஆண்ட்ரே ரஸல் உடன் ரிங்கு சிங் இணைந்தார்.
Ind vs Aus WTC Final: கேஎல் ராகுலுக்கு பதிலாக விருத்திமான் சஹா?
இருவரும் பவுண்டரியும், சிக்ஸருமாக விரட்ட கடைசி 6 பந்தில் கேகேஆர் வெற்றிக்கு வெறும் 6 ரன்களே தேவைப்பட்டது. கடைசி ஒவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் 3 பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்த ரஸல் 5ஆவது பந்தில் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிங்கு சிங் புல்டாஸ் பந்தை சரியான முறையில் பவுண்டரிக்கு திருப்பி விட்டார். இதன் மூலமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2ஆவது முறையாக அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார் ரிங்கு சிங். இதற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்துக் கொடுத்து அணிக்கு தேடிக் கொடுத்தார்.
பிளாக் அண்ட் பிளாக் பைஜாமாவில் கலக்கும் கேப்டன்: கையில் கலாஷ் நிகாவ்வோடு விளையாடும் எம்.எஸ்.தோனி!
அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக இந்த வெற்றியின் மூலமாக 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.
The finish by Rinku & atmosphere in Eden.
What a sight, IPL at it's best. pic.twitter.com/oFk8j9UKv8