கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்து, 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே அனைத்து அணிகளுக்கும் முக்கியமானது. புள்ளி பட்டியலில் 7 மற்றும் 8ம் இடங்களில் இருக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாபர் அசாம் புதிய சாதனை..! இனிமேல் யாரும் முறியடிப்பது கடினம்
பஞ்சாப் கிங்ஸ் அணி:
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா, வருன் சக்கரவர்த்தி.
ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக இஷான் கிஷன் அறிவிப்பு
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒருமுனையில் மற்றவீரர்கள் ஆட்டமிழந்தாலும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான ஷிகர் தவான் அரைசதம் அடித்தார். 47 பந்தில் 57 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழக்க, பின்வரிசையில் ஷாருக்கானும் ஹர்ப்ரீத் பிராரும் இணைந்து அதிரடியாக முடித்து கொடுத்தனர். ஷாருக்கான் 8 பந்தில் 21 ரன்களும், ஹர்ப்ரீத் பிரார் 9 பந்தில் 17 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 179 ரன்கள் அடித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 180 ரன்கள் என்ற இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.