ENG vs IND: டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஆடல.. பும்ரா கேப்டனாக அறிவிப்பு..! மிகப்பெரிய கௌரவம் என பும்ரா பெருமிதம்

By karthikeyan VFirst Published Jun 30, 2022, 7:35 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி(நாளை) முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா:

லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி  போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க - ENG vs IND: வெறும் சதத்தை மட்டும் பார்க்காதீங்க..! விராட் கோலிக்கு முட்டு கொடுக்கும் ராகுல் டிராவிட்

பும்ரா கேப்டனாக நியமனம்:

டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், ரோஹித் சர்மா கொரோனாவிலிருந்து மீள்வாரா என்று இன்று வரை காத்திருந்து எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா கொரோனாவிலிருந்து மீளாததால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்

ஜஸ்ப்ரித்  பும்ரா சாதனை:

கபில் தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜஸ்ப்ரித் பும்ரா. ஜஸ்ப்ரித் பும்ராவின் கேப்டன்சியில் இந்திய அணி எப்படி ஆடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி மட்டுமல்லாது, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், பும்ராவின் கேப்டன்சியில் முதல் போட்டியே முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

பும்ரா பெருமிதம்:

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய கௌரவம் என்றும், மிகப்பெரிய சாதனை என்றும் பும்ரா பெருமிதம் தெரிவித்துள்ளார். 

click me!