ENG vs IND: டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Jun 30, 2022, 5:46 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.


இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி:

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 1ம் தேதி) எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. 2-1 என இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 3-1 என டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் 2-2 என சமன் செய்யும் முனைப்பில் உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - ENG vs IND: வெறும் சதத்தை மட்டும் பார்க்காதீங்க..! விராட் கோலிக்கு முட்டு கொடுக்கும் ராகுல் டிராவிட்

ரோஹித் சர்மாவுக்கு கொரோனா:

இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கவிருந்தது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோஹித் சர்மா இன்னும் கொரோனாவிலிருந்து மீளவில்லை. டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆகிவிட்டால் அவர் ஆடுவார். அப்படி இல்லையென்றால் பும்ரா கேப்டன்சி செய்யவுள்ளார்.

இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

இந்திய அணி காம்பினேஷன்:

ரோஹித் சர்மா ஆடாதபட்சத்தில் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். புஜாரா 3ம் வரிசையிலும், கோலி 4ம் வரிசையிலும் வழக்கம்போல ஆடுவார்கள். 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 6ம் வரிசையில் ஹனுமா விஹாரி ஆகியோரும், 7ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் களமிறங்குவார்கள்.

இதையும் படிங்க - ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்

ஸ்பின்னராக அஷ்வின் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக  முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருடன் பிரசித் கிருஷ்ணா களமிறங்குவார். 

இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:

மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

இருபெரும் ஜாம்பவன்களான ராகுல் டிராவிட் மற்றும் பிரண்டென் மெக்கல்லம் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் களமிறங்குவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
 

click me!