ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Jun 30, 2022, 3:05 PM IST
Highlights

இங்கிலாந்து அணி எப்படி ஆடுகிறது என்பதெல்லாம் எங்களுக்கு விஷயமே இல்ல; எங்களது ஆட்டத்தில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்தன. அதில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைக்கப்பட்ட அந்த கடைசி டெஸ்ட் போட்டி இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி; இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா; இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இரு அணிகளின் கேப்டன்கள் மட்டுமல்லாது, மொத்த அணி சூழலே மாறியிருக்கிறது என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கடந்த ஆண்டு ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளர். இந்த முறை ராகுல் டிராவிட். அதேபோல இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இப்போது பிரண்டன் மெக்கல்லம் செயல்படுகிறார். 

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட்டில் ரோஹித் ஆடுவது சந்தேகம்! கேப்டன் பும்ரா.. கபில் தேவுக்கு அடுத்து பும்ரா தான்.. செம சாதனை

கடந்த ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, சொந்த மண்ணில் 2 தோல்விகளை சந்தித்தது இங்கிலாந்து அணி. ஆனால் பிரண்டன் மெக்கல்லமின் பயிற்சியில் பென் ஸ்டோக்ஸின் கேப்டன்சியில் நியூசிலாந்தை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்து 3-0 என இங்கிலாந்து வென்றுள்ளது.

அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இங்கிலாந்து அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்திய அணியும் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றுள்ள நிலையில், அந்த அணியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், நாங்கள் (இந்திய அணி) ஏற்கனவே 2-1 என இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறோம். நாங்கள் எப்படி ஆடுகிறோம் என்பது எங்களை பொறுத்தது. இங்கிலாந்து எப்படி ஆடினாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் எங்களது ஆட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறோம். 

அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியம். நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணி நன்றாக ஆடியது. முழு கிரெடிட்டும் அவர்களுக்குத்தான். நாங்களும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த கிரிக்கெட் ஆடிவருகிறோம். நாங்கள் நன்றாக ஆடினால் கண்டிப்பாக இங்கிலாந்தை வீழ்த்துவிடலாம் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
 

click me!