IRE vs IND:கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அயர்லாந்து! 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்ற இந்தியா

By karthikeyan VFirst Published Jun 29, 2022, 8:01 AM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
 

இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் படேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் களமிறக்கப்பட்டனர்.

இதையும் படிங்க - Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்

இந்திய அணி:

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், ஆண்டி மெக்பிரைன், க்ரைக் யங், ஜோஷூவா லிட்டில், கானர் ஆல்ஃபெர்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

அதிரடியாக ஆடிய ஹூடா 55 பந்தில் சதமடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த ஹூடா, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 57 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார். 

சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இவர்கள் விக்கெட்டுக்கு பிறகு மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஆனாலும் ஹூடா மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 225 ரன்களை குவித்து, 226 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.
 
226 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் மற்றும் பால்பிர்னி ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஸ்டர்லிங் 18 பந்தில் 40 ரன்களையும், பால்பிர்னி 37 பந்தில் 60 ரன்களையும் குவித்தனர். இவர்களது அதிரடியான தொடக்கத்தால் 10.3 ஓவரில் 117 ரன்கள் என்ற வலுவான நிலையில் அயர்லாந்து இருந்தது. அந்த கட்டத்தில் பால்பிர்னி ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - Samaira Rohit: ரோஹித் ஹெல்த் அப்டேட் சொன்ன மகள் சமைரா..! மனதை கொள்ளை கொள்ளும் செம கியூட் வீடியோ

அதன்பின்னர் ஹாரி டெக்டார் 28 பந்தில் 39 ரன்கள் அடித்தார். ஜார்ஜ் டாக்ரெல்லும், மார்க் அடைரும் இணைந்து டெத் ஓவர்களில் அடி வெளுத்து வாங்கி இலக்கை நெருங்கினர். டாக்ரெல் 16 பந்தில் 34 ரன்களும், அடைர் 12 பந்தில் 23 ரன்களும் விளாசினர். ஆனாலும் அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 221 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. வெறித்தனமாக இலக்கை விரட்டியபோதிலும், கடைசியில் 5 ரன்கள் அடிக்க முடியாமல், 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது அயர்லாந்து.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என டி20 தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை தீபக் ஹூடா வென்றார்.
 

click me!