IRE vs IND: தீபக் ஹூடா காட்டடி சதம்.. சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்..! அயர்லாந்துக்கு மிகக்கடின இலக்கு

By karthikeyan VFirst Published Jun 28, 2022, 11:16 PM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தீபக் ஹூடாவின் அதிரடி சதம் மற்றும் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 225 ரன்களை குவித்து, 226 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் படேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் களமிறக்கப்பட்டனர்.

இதையும் படிங்க - Samaira Rohit: ரோஹித் ஹெல்த் அப்டேட் சொன்ன மகள் சமைரா..! மனதை கொள்ளை கொள்ளும் செம கியூட் வீடியோ

இந்திய அணி:

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்.

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், ஆண்டி மெக்பிரைன், க்ரைக் யங், ஜோஷூவா லிட்டில், கானர் ஆல்ஃபெர்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும் இஷான் கிஷனும் களமிறங்கினர். இஷான் கிஷன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சஞ்சு சாம்சனுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர்.

இதையும் படிங்க - Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்

அதிரடியாக ஆடிய ஹூடா 55 பந்தில் சதமடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 193 ரன்களை குவித்தனர். தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்த ஹூடா, அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 57 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்தார். 

சஞ்சு சாம்சன் 42 பந்தில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இவர்கள் விக்கெட்டுக்கு பிறகு மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஆனாலும் ஹூடா மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 227 ரன்களை குவித்து, 228 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.
 

click me!