சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனான இயன் மோர்கன் ஓய்வு அறிவித்தார்.
அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவந்தார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது.
அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன். 2015 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியை, அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அச்சமற்ற கிரிக்கெட் ஆடி அசாத்திய ஸ்கோர்களை அடிக்கவல்ல மற்றும் எதிரணிகளை அடித்து துவம்சம்செய்து வெற்றிகளை வசப்படுத்தக்கூடிய வலுவான அணியாக கட்டமைத்தார் இயன் மோர்கன்.
இதையும் படிங்க - Samaira Rohit: ரோஹித் ஹெல்த் அப்டேட் சொன்ன மகள் சமைரா..! மனதை கொள்ளை கொள்ளும் செம கியூட் வீடியோ
2015 உலக கோப்பை தோல்விக்கு பின்னரே, 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு, இடைப்பட்ட 4 ஆண்டுகளில் வலுவான அணியை கட்டமைத்தார் இயன் மோர்கன். பட்லர், பேர்ஸ்டோ, ராய் ஆகிய வீரர்களுடன் தானும் அதிரடியாக பேட்டிங் ஆடி, 400 என்ற ஸ்கோரை ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்ட்டாக்கியவர் இயன் மோர்கன்.
பெரும் எதிர்பார்ப்புடன் 2019 உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.
இதையும் படிங்க - இப்ப மட்டுமில்ல; இனி எப்பவுமே அவன் கேப்டனாக முடியாது.. மோசமான கேப்டன்! ரோஹித் இல்லைனா அவருதான் கேப்டன்
சர்வதேச கிரிக்கெட்டில் 248 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7701 ரன்களையும், 115 டி20 போட்டிகளில் ஆடி 2458 ரன்களையும் குவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக ஃபிட்னெஸ் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் மோர்கன், அண்மையில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து சாதனையை செய்தபோதிலும், அந்த போட்டியிலும், அதற்கடுத்த போட்டியிலும் என 2 அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார் மோர்கன்.
இதையும் படிங்க - ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்
தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், அணிக்கு தன்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்ற நிலையில், தான் அணியில் இருந்து பயனில்லை என்று மோர்கன் கூறியிருந்தார். அதுவும் உண்மைதான். அந்தவகையில், இனிமேல் தான் இங்கிலாந்துக்கு அணிக்கு தேவையில்லை என்று முடிவெடுத்துள்ள மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு அறிவித்தார்.