IRE vs IND: 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்

Published : Jun 28, 2022, 08:52 PM IST
IRE vs IND: 2வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது போட்டி இன்று நடக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை சமன் செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியும் களமிறங்கியுள்ளன.

இதையும் படிங்க - Eoin Morgan retires: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் இயன் மோர்கன்

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஆடாததால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஆவேஷ் கானுக்கு பதிலாக ஹர்ஷல் படேலும், சாஹலுக்கு பதிலாக ரவி பிஷ்னோயும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - Samaira Rohit: ரோஹித் ஹெல்த் அப்டேட் சொன்ன மகள் சமைரா..! மனதை கொள்ளை கொள்ளும் செம கியூட் வீடியோ

இந்திய அணி:

சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக்.

இதையும் படிங்க - ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்

அயர்லாந்து அணி:

பால் ஸ்டர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), காரெத் டிலானி, ஹாரி டெக்டார், லார்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், ஆண்டி மெக்பிரைன், க்ரைக் யங், ஜோஷூவா லிட்டில், கானர் ஆல்ஃபெர்ட்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
Ishan Kishan: "வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்