ENG vs IND: டெஸ்ட்டில் ரோஹித் ஆடுவது சந்தேகம்! கேப்டன் பும்ரா.. கபில் தேவுக்கு அடுத்து பும்ரா தான்.. செம சாதனை

By karthikeyan VFirst Published Jun 30, 2022, 2:23 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோஹித் சர்மா ஆடாத பட்சத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் கேப்டன்சியை ஏற்று செயல்படவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி(நாளை) முதல் எட்ஜ்பாஸ்டனில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது.

லெய்செஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி  போட்டியில் ஆடியபோது ரோஹித்துக்கு கொரோனா உறுதியானது. அதனால் தான் அந்த பயிற்சி போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோஹித் பேட்டிங் ஆடவில்லை. கேஎல் ராகுலும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க - IRE vs IND:கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அயர்லாந்து! 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வென்ற இந்தியா

ரோஹித் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கொரோனாவிலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்பட்ட நிலையில், நேற்று வரை அவர் கொரோனாவிலிருந்து மீளவில்லை. எனவே அவர் ஆடாதபட்சத்தில் யார் கேப்டன் என்பது பெரும் விவாதமாக இருந்துவருகிறது.

இதையும் படிங்க - ENG vs IND: எதிரணி எதுவா இருந்தா என்ன..? டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்

கேஎல் ராகுலும் ஆடாததால் ரிஷப் பண்ட் கேப்டன்சி செய்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவரது கேப்டன்சி திருப்தியளிக்கும் விதமாக இல்லை. அவர் பக்குவமற்ற கேப்டனாக இருக்கிறார் என்பதால், டெஸ்ட்டில் கேப்டன்சி செய்யும் அளவிற்கு தகுதியான கேப்டன் அவர் இல்லை என்பதால் யார் கேப்டன் என்பது கேள்வியாக இருந்துவந்தது.

இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்புவரை ரோஹித்துக்கு பரிசோதனை செய்யப்படும். அவருக்கு கொரோனா நெகட்டிவ் ஆகும்பட்சத்தில் அவர் ஆடுவார். அப்படி இல்லையென்றால், ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

பும்ரா கேப்டன்சி செய்யும் பட்சத்தில், கபில் தேவுக்கு அடுத்து  இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வழிநடத்தும் ஃபாஸ்ட் பவுலிங் கேப்டன் என்ற சாதனையை பும்ரா படைப்பார்.
 

click me!