TNPL 2022: விஷால் வைத்யா அதிரடி பேட்டிங்! நெல்லை ராயல் கிங்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல் டிராகன்ஸ்

Published : Jun 30, 2022, 07:15 PM IST
TNPL 2022: விஷால் வைத்யா அதிரடி பேட்டிங்! நெல்லை ராயல் கிங்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல் டிராகன்ஸ்

சுருக்கம்

நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 130 ரன்களை குவித்து, 131 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.  

போட்டி தாமதம்:

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் தாமதமானது. திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸுக்கு இடையேயான போட்டி மழையால் தாமதமானது.

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

டாஸ் ரிப்போர்ட்:

தாமதமாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமானதால் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

லக்‌ஷ்மேஷா சூர்யபிரகாஷ், ஸ்ரீநிரஞ்சன், பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சஞ்சய் யாதவ், ஜி அஜிதேஷ், ஜிதேந்திர குமார், எம் ஷாஜகான், என்.எஸ்.ஹரிஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஆர்யா யோஹன் மேனன்.

இதையும் படிங்க - ENG vs IND: அவனுங்க எப்படி ஆடுனா எங்களுக்கென்ன.? அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல - செம கெத்தா பேசிய ராகுல் டிராவிட்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி:

விஷால் வைத்யா, ஹரி நிஷாந்த் (கேப்டன்), மணிபாரதி (விக்கெட் கீப்பர்), ஏஜி பிரதீப், மோகித் ஹரிஹரன், ஆர் விவேக், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், கரபரம்பில் மோனிஷ், எஸ் அருண், எம் சிலம்பரசன், ரங்கராஜ் சுதேஷ்.

இதையும் படிங்க - ENG vs IND: வெறும் சதத்தை மட்டும் பார்க்காதீங்க..! விராட் கோலிக்கு முட்டு கொடுக்கும் ராகுல் டிராவிட்

முதல் இன்னிங்ஸ் ரிப்போர்ட்:

முதலில் பேட்டிங் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள், 12 ஓவர் போட்டி என்பதால் முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். தொடக்க வீரர்கள் விஷால் வைத்யா - ஹரி நிஷாந்த் இணைந்து அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 82 ரன்களை குவித்தனர். ஹரி நிஷாந்த் 27 பந்தில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - ENG vs IND: டெஸ்ட்டில் ரோஹித் ஆடுவது சந்தேகம்! கேப்டன் பும்ரா.. கபில் தேவுக்கு அடுத்து பும்ரா தான்.. செம சாதனை

மற்றொரு தொடக்க வீரரான விஷால் வைத்யா 21 பந்தில்45 ரன்களை விளாசினார். அதன்பின்னர் விவேக், பிரதீப், மோனிஷ் ஆகியோரின் பங்களிப்பால் 12 ஓவரில் 130 ரன்களை குவித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 131 ரன்கள் என்ற கடின இலக்கை நெல்லை ராயல் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி