இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்க இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதில், நடந்து முடிந்த 2 போட்டிகளில் முறையே இந்தியா 5 விக்கெட்டுகள் மற்றும் 99 ரன்கள் (டக் ஒர்த் லீவிஸ் முறை) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ராஜ்கோட்டில் நடக்க இருக்கிறது.
Cricket World Cup 2023: கபில் தேவ் கடத்தப்பட்டது எதற்காக? இதோ வெளியானது உண்மையான காரணம்!
இந்த ராஜ்கோட் மைதானமானது, ஆடுகளம் சமநிலையான போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், சேஸிங் செய்வது மிகவும் சிறந்த தேர்வாக இருக்கும்.
முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 2ஆவது ஒரு நாள் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். பின்னர் வந்த கேஎல் ராகுல் 50 ரன்கள் எடுக்க, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 72 ரன்கள் நாட் அவுட் எடுத்தார்.
பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய 17 வயது வீராங்கனை நேஹா தாக்கூர்!
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் டேவிட் வார்னர் சிறப்பான பங்களிப்பை அமைத்துக் கொடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக வந்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உள்பட 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மேலும், பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் கைப்பற்ற, முகமது ஷமி ஒரு விக்கெட் கைப்பற்றினார். முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து நாளை நடக்க உள்ள 3ஆவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற இருக்கின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இதுவரையில் நடந்த 148 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 56 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா 82 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.
ஆஸ்திரேலியா:
மேத்யூ ஷார்ட், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லபுஷேன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சீன் அப்பாட், ஆடம் ஜம்பா, ஜோஸ் ஹசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன்.
இந்திய அணியின் முக்கியமான வீரர்கள்:
சுப்மன் கில்:
சுப்மன் கில் 35 இன்னிங்ஸ்களில் விளையாடி 1917 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 208 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜஸ்ப்ரித் பும்ரா:
கடந்த ஒரு நாள் போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இடம் பெற்ற பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். எனினும் இதுவரையில் விளையாடிய 77 போட்டிகளில் பும்ரா 126 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் சிறந்த பந்து வீச்சாக 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முக்கியமான வீரர்கள்:
கேமரூன் க்ரீன்:
ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட கேமரூன் க்ரீன் 2ஆவது ஒரு நாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி 103 ரன்கள் கொடுத்தார். பேட்டிங்கில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும், அவரை நம்பி ஆஸ்திரேலியா தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.
டேவிட் வார்னர்:
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளிலும் டேவிட் வார்னர் அரைசதம் அடித்துள்ளார். இதுவரையில் விளையாடிய 146 ஒரு நாள் போட்டிகளில் வார்னர் 6136 ரனக்ள் எடுத்துள்ளார். இதில், 20 சதமும், 27அரைசதமும் அடங்கும்.
IND vs AUS: புதிய வரலாற்று சாதனை படைத்த இந்தியா – ODIல் 3000 சிக்ஸர்கள் அடித்து சாதனை!
Expectation: IND vs AUS 3rd and Final ODI:
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் முதல் பேட்டிங் செய்யும் அணி அதிகபட்சமாக 330 ரன்கள் குவிக்க வாய்ப்பு.
இந்தப் போட்டியில் சுப்மன் கில் விளையாடினால், அவர் தான் ஆட்டநாயகன் விருது பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
இதே போன்று சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு உண்டு.
இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் எடுக்க வாய்ப்பு.
முதல் ஓவரில் குறைந்தபட்சமாக 4 ரன்கள் எடுக்க வாய்ப்பு உண்டு.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
கேமரூன் க்ரீன் அதிக சிக்ஸர்கள் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
சுப்மன் கில் அதிக பவுண்டரியும் அடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இது எல்லாம் போட்டியில் இடம் பெறும் வீரர்களைப் பொறுத்து மாறுபடவும் வாய்ப்பு உண்டு.