
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை விளம்பரப்படுத்தும் விதமாக விளம்பரத்திற்காக OTT செயலியான Disney+ Hotstar உடன் இணைந்து பணியாற்றுகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றில் அவர் நடித்துள்ளார். அதில், அவர் கிராமத்தினர்களால கடத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளார். மேலும், போலீசார் அவரை மீட்க வருகையில், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளின் போது தடையில்லா மின்சாரம் கிடைத்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று கடத்தல்காரர்கள் கூறுகின்றனர்.
இதற்கு போலீஸ் அதிகாரிகள், Disney+ Hotstar ஓடிடி ஆப்பில் எந்த இடையூறும் இல்லாமல் இலவச நேரலை ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கலாம் என்று கிராமவாசிகளை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். அந்த புரோமோ வீடியோவிலும் கபில் தேவ் உறுதியளிக்கிறார்.
பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய 17 வயது வீராங்கனை நேஹா தாக்கூர்!
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை நடக்க உள்ள 3 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளது.
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
உலகக் கோப்பைக்கு முன்னதாக 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் வார்ம் அப் போட்டியில் ஒவ்வொரு அணியும் இடம் பெற்று விளையாடுகின்றன. இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 29: வங்கதேசம் – இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி
செப்டம்பர் 29: தென் ஆப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி
செப்டம்பர் 29: நியூசிலாந்து vs பாகிஸ்தான் – ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி
செப்டம்பர் 30: இந்தியா – இங்கிலாந்து vs கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி
செப்டம்பர் 30: ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி
அக்டோபர் 02: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி
அக்டோபர் 02: இங்கிலாந்து vs வங்கதேசம் கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி
அக்டோபர் 03: ஆப்கானிஸ்தான் vs இலங்கை கவுகாத்தி பிற்பகல் 2.00 மணி
அக்டோபர் 03: இந்தியா vs நெதர்லாந்து திருவனந்தபுரம் பிற்பகல் 2.00 மணி
அக்டோபர் 03: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா ஹைதராபாத் பிற்பகல் 2.00 மணி
இந்த வார்ம் அப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் லைட் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.