உலகக் கோப்பைக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆசிய கோப்பையில் இந்திய அணியை திணற வைத்த துனித் வெல்லலகே சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், டெல்லி, லக்னோ, ஹைதராபாத், தர்மசலா என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
பாய்மர படகுப் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கைப்பற்றிய 17 வயது வீராங்கனை நேஹா தாக்கூர்!
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் தனது அணியை அறிவித்தது. இந்த நிலையில் இலங்கை அணி தற்போது 15 பேர் கொண்ட தங்களது அணியை தற்போது அறிவித்துள்ளது.
Equestrian: 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
இதில், இளம் வீரரான துனித் வெல்லலகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என்று முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் தசுன் ஷனாகா கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவோ நீக்கப்படுவதோ செய்தி வெளியானது. ஆனால், உலகக் கோப்பை தொடர் முடியும் வரையில் ஷனாகா கேப்டனாக செயல்படுவார் என்று இலங்கை வாரியம் அறிவித்தது. அணியில் குசால் மெண்டிஸ், திமுத் கருணாரத்னே, தனஞ்சயா டி சில்வா என்று சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், வணிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகிய மூன்று முக்கிய வீரர்களின் உடற்தகுதி மதிப்பீடு மற்றும் அவர்களின் காயங்களிலிருந்து மீண்டு வருவதற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் குழுவில் அவர்கள் சேர்க்கப்படுவது, போட்டிக்கு அருகில் இருக்கும் அவர்களின் உடற்தகுதி அளவைப் பொறுத்தது என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து துஷாந்த் ஹேமந்த் மற்றும் சமிகா கருணாரத்னே ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக (ஸ்டாண்ட் பை பிளேயர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உலகக் கோப்பைக்கான இலங்கை அணி வீர்ரகள்:
தசுன் ஷனாகா (கேப்டன்), குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்/ துணை கேப்டன்), பதும் நிசாங்கா, குசால் ஜனித், திமுத் கருணாரத்னே, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, துனித் வெல்லலகே, கசுன் ரஜிதா, மதீஷ் பதிரனா, லகிரு குமாரா, வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா.
துஷாந்த் ஹேமந்த், சமிகா கருணாரத்னே – ஸ்டாண்ட் பை பிளேயர்ஸ்
உடல் தகுதியைப் பொறுத்து வாய்ப்பு பெறும் வீரர்கள் - வணிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா.