ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியா வந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது மொகாலியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் தனது 29ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் வெளியேற, மார்னஸ் லபுஷேன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் இங்கிலிஸ் 45 ரன்களும், கேமரூன் க்ரீன் 31 ரன்களும் எடுக்க, இறுதியாக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இருவருமே இணைந்து முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 77 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 71 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக தனது முதல் அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்துள்ளார். இது அவரது 3ஆவது ஒருநாள் போட்டி ஆகும்.
இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பிறகு கேப்டன் கேஎல் ராகுல் களமிறங்கினார். சுப்மன் கில் 74 ரன்களில் ஆடம் ஜம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.
அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் குவித்தார். அவர் இந்தப் போட்டியின் மூலமாக தனது 9ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 1121 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமாக 13ஆவது இந்திய வீரராக 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1998 ஆம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் 1894 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
அதன் பிறகு இஷான் கிஷான் 18 ரன்களில் ஆட்டமிழக்க கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். சூர்யகுமார் யாதவ் தனது 3ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை பதிவு செய்தார். மேலும், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆண்டில் முதல் முறையாக ரன்கள் சேர்த்துள்ளார். இதற்கு முன்னதாக தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் அவர் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் தனது 14ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை இந்தப் போட்டியில் நிறைவு செய்தார். இறுதியாக இந்தியா 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.