ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக 93 போட்டிகளுக்குப் பிறகு முகமது ஷமி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி மொகாலியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில், டாஸ் வென்ற கேஎல் ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
அதன்படி, ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இதில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் முகமது ஷமி ஓவரில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 2ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்தது. வார்னர் 14 ரன்களாக இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட்டார்.
இதன் காரணமாக வார்னர் ஒருநாள் போட்டியில் தனது 29ஆவது அரைசதத்தை அடித்தார். மேலும், இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 101 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மார்னஷ் லபுஷேன் களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் ஷமி பந்தில் கிளீன் போல்டார்.
அடுத்து லபுஷேனுடன், கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். ஒரு கட்டத்தில் லபுஷேன் 11 ரன்களாக இருந்த போது கொடுத்த ரன் அவுட் வாய்ப்பை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் தவறவிட்டார். இதையடுத்து அவர் கூடுதலாக 28 ரன்கள் சேர்த்து அஸ்வின் பந்தில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேமரூன் க்ரீன் 31 ரன்களில் ரன் அவுட்டானார்.
அதன் பிறகு ஜோஸ் இங்கிலிஸ் களமிறங்கினார். இவர் வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசினார். இதே போன்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்தடுத்த பவுண்டரி அடித்த நிலையில், ஷமி பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து இங்கிலிஸ் 45 பந்துகளில் பும்ரா பந்தில் ஷ்ரேயாஸ் இயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மேத்யூ ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சீன் அபாட் 2 ரன்களில் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக பேட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் முகமது ஷமி, மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், சீன் அபாட் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளார். கபில் தேவ் 45 விக்கெட்டுகளும், முகமது ஷமி 37 விக்கெட்டுகளும், அஜித் அகர்கர் 36 விக்கெட்டுகளும், ஜஹகல் ஸ்ரீநாத் 33 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.
அதோடு, 93 ஒரு நாள் போட்டிகளுக்குப் பிறகு முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும், ஹோம் மைதானங்களில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜாகிர்கான் சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள்:
1983 - கபில் தேவ் – 43 ரன்கள் 5 விக்கெட்டுகள்
2004 – அஜித் அகர்கர் – 42 ரன்கள் – 6 விக்கெட்டுகள்
2023 – முகமது ஷமி – 51 ரன்கள் – 5 விக்கெட்டுகள்
Shami has the most wickets for India after 93 matches in ODI history.
- The sensational Shami....!!!!! pic.twitter.com/FNz5ktOr9u