IND vs AUS: 10 பவுண்டரி 71 ரன்கள் – ஆஸி.,க்கு எதிரான ஃபர்ஸ்ட் போட்டியில் மெய்டன் அரைசதம் அடித்த சிஎஸ்கே வீரர்!

Published : Sep 22, 2023, 08:45 PM IST
IND vs AUS: 10 பவுண்டரி 71 ரன்கள் – ஆஸி.,க்கு எதிரான ஃபர்ஸ்ட் போட்டியில் மெய்டன் அரைசதம் அடித்த சிஎஸ்கே வீரர்!

சுருக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா வீரர்கள் இந்தியா வந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது மொகாலியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் ஆடியது. இதில், டேவிட் வார்னர் தனது 29ஆவது ஒருநாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்களில் வெளியேற, மார்னஸ் லபுஷேன் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs AUS 1st ODI Match Live Score:93 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு முகமது ஷமி அதிக விக்கெட் கைப்பற்றி சாதனை!

ஜோஸ் இங்கிலிஸ் 45 ரன்களும், கேமரூன் க்ரீன் 31 ரன்களும் எடுக்க, இறுதியாக ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் குவித்தது. பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இருவருமே இணைந்து முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 77 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 71 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக தனது முதல் அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்துள்ளார். இது அவரது 3ஆவது ஒருநாள் போட்டி ஆகும்.

IND vs AUS: பீல்டிங், கேட்ச், ரன் அவுட் எல்லாவற்றையும் கோட்டை விட்ட கேஎல் ராகுல் – ஆஸி, 276 ரன்கள் குவிப்பு!

இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதன் பிறகு கேப்டன் கேஎல் ராகுல் களமிறங்கினார். சுப்மன் கில் 74 ரன்களில் ஆடம் ஜம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.

India vs Australia ODI Match: அடிச்ச காத்துக்கு கரண்டே இல்லாம போச்சு; இதுல மழை வேறு….போட்டி பாதிப்பு!

அவர் 63 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உள்பட 74 ரன்கள் குவித்தார். மேலும், இந்த ஆண்டில் இதுவரையில் 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் 1121 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலமாக 13ஆவது இந்திய வீரராக 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1998 ஆம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர் 1894 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?