ஆசிய கோப்பையைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இந்தியா, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 1 அணியாக இருக்க முடியும் - கவுதம் காம்பீர்!
வெஸ்ட் இண்டீஸ் தொடர்: ஜூலை 12 – ஆகஸ்ட் 13
அயர்லாந்து தொடர்: ஆகஸ்ட் 18 – ஆகஸ்ட் 23
ஆசிய கோப்பை 2023: ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 17
இந்தியா – ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடர் – செப்டம்பர்
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: அக்டோபர் 05 – நவம்பர் 19
ஆசிய விளையாட்டு போட்டிகள்: செப்டம்பர் 23 – அக்டோபர் 08
இதையடுத்து இந்தியா, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு, ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது. அடுத்ததாக உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான அட்டவணை அண்மையில் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
இந்த நிலையில் தான் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது. இதனை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. ஆசிய கோப்பை தொடரைத் தொடர்ந்து உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்துகிறது.
இதுவரையில் இந்தியா அனைத்து போட்டிகளையும் வெளிநாட்டு மைதானங்களில் விளையாடி இருந்தது. இது உலகக் கோப்பைக்கு முன்னதான வார்ம் அப் போட்டியாக இந்தியாவிற்கு இருக்கும். இது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. அடுத்து நடந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இந்தியா 1-2 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது.