உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் நம்பர் 1 அணியாக இருக்க முடியும் - கவுதம் காம்பீர்!

By Rsiva kumar  |  First Published Jul 2, 2023, 10:27 AM IST

உலக கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பர் 1 அணியாக இருக்க முடியும் என்று தான் இன்னமும் நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.


இந்தியாவில் நடக்கும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஏற்கனவே 8 அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், கடைசியாக உள்ள 2 இடத்திற்கான உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேப்டனாகும் எல்லா தகுதியும் உண்டு: தினேஷ் கார்த்திக்!

Tap to resize

Latest Videos

இதில், 10 அணிகள் இடம் பெற்று குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடின. இதில், முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி அமெரிக்கா, நேபாள், அயர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறின.

நா ரெடி பாடலுக்கு... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் மாஸ் ஆக நடனமாடி அசத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

இதைத் தொடர்ந்து இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய அணிகள் உலகக் கோப்பை தகுதி சுற்று சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்னேறின. இதில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 6 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.

விமல் குமார், சிவம் சிங் அதிரடியால் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

இதையடுத்து நேற்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

🚨BREAKING: Sad news for cricket fans! Two-time champs West Indies (1975, 1979) won't participate in 2023 World Cup in . Tough time for cricket. Their absence in World Cup is disheartening. Downfall of West Indies is truly saddening💔 pic.twitter.com/Gvr46CAnh7

— ICC Asia Cricket (@ICCAsiaCricket)

 

இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. வரிசையாக 3 போட்டியிலும் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்து இந்த தொடரிலிருந்து முதல் முறையாக வெளியேறியுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை தொடரில் இடம் பெற முடியாமல் வெளியேறியுள்ளது.  கடந்த 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியனானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியை ரொம்பவே பிடிக்கும். உலக கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். நான் வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட்டை விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் 4 கோல் அடித்து இந்தியா வெற்றி! இறுதிப் போட்டியில் குவைத்துடன் பலப்பரீட்சை!

 

I love West Indies
I love West Indian cricket
I still believe they can be the No.1 team in world cricket!

— Gautam Gambhir (@GautamGambhir)

 

click me!