CWC 2023: ரன்வீர் சிங் முதல் அரிஜித் சிங் வரையில் உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்!

Published : Oct 02, 2023, 10:22 AM ISTUpdated : Oct 02, 2023, 10:31 AM IST
CWC 2023: ரன்வீர் சிங் முதல் அரிஜித் சிங் வரையில் உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்!

சுருக்கம்

உலகக் கோப்பை தொடக்க விழா வரும் 4 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், அதற்காக அகமதாபாத் மைதானம் தயாராகியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து, 2023 ஆம் ஆண்டுக்கான 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது.

1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 1 வெண்கலம்; குண்டு எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!

ஆனால், 4ஆம் தேதியே கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா நடக்க இருக்கிறது. அக்டோபர் 4 ஆம் தேதி கேப்டன்ஸ் டே என்று அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் பாலிவுட் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. அதில், ரன்வீர் சிங், சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல், அரிஜித் சிங், ஆஷா போஸ்லே, தமன்னா, சமந்தா, ஜான்வி கபூர் ஆகியோர் இந்த தொடக்க விழாவின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Cricket World Cup 2023: காயம் காரணமாக டிம் சவுதி விலகல்? ஏற்கனவே கேன் வில்லியம்சனும் இல்லை!

இதற்காக அகமதாபாத் மைதானம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா கலை நிகழ்ச்சிக்காக மைதானத்தில் ரிகர்ஷலும் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் 4 ஆம் தேதி பிரமாண்ட தொடக்க விழா நடக்க உள்ள நிலையில், 3ஆம் தேதியே 10 அணிகளின் கேப்டன்களும் அகமதாபாத் வர உள்ளனர். ஆனால், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான வார்ம் அப் போட்டியானது நாளை திருவனந்தபுரம் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில், ரோகித் சர்மா உள்ளிட்ட சில கேப்டன்கள் 4ஆம் தேதி அகமதாபாத் மைதானத்திற்கு வருகின்றனர்.

 

 

CWC 2023: மிஷன் உலகக் கோப்பை ஆரம்பம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கோலி – ரவிச்சந்திரன் அஸ்வின்!

மேலும், இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வானவேடிக்கைகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொள்வார்கள். ரசிகர்களைப் பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடக்கப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம்.

ஆஷா போஸ்லே தனது அழகான குரலால் பார்வையாளர்களை மயக்குவார். ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். ஐசிசியின் உலகக் கோப்பை ஆந்தம் பாடல் வீடியோவில் இடம் பெற்ற ரன்வீர் சிங் உள்ளிட்ட சில பாலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்களும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

CWC 2023: 48 ஆண்டுகால வரலாற்றில் 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி கோலி, அஸ்வின் சாதனை படைப்பார்களா?

கிரிக்கெட் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்:

  1. ஆஷா போஸ்லே
  2. ஷ்ரேயா கோஷல்
  3. ஷங்கர் மகாதேவன்
  4. அரிஜித் சிங்
  5. ரன்வீர் சிங்
  6. தமன்னா

உலகக் கோப்பை 10 அணிகளின் கேப்டன்கள்:

  1. இந்தியா – ரோகித் சர்மா
  2. இலங்கை – தசுன் ஷனாகா
  3. ஆஸ்திரேலியா – பேட் கம்மின்ஸ்
  4. நியூசிலாந்து – கேன் வில்லியம்சன்
  5. இங்கிலாந்து – ஜோஸ் பட்லர்
  6. பாகிஸ்தான் – பாபர் அசாம்
  7. வங்கதேசம் – ஷாகிப் அல் ஹசன்
  8. தென் ஆப்பிரிக்கா – டெம்பா பவுமா
  9. ஆப்கானிஸ்தான் - ஹஷ்மத்துல்லா ஷாஹிதி
  10. நெதர்லாந்து - ஸ்காட் எட்வர்ட்ஸ்

CWC 2023:ஆரோன் பிஞ்ச் தவிர சீனியர் வீரர்களின் கணிப்பில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வாய்ப்பு

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?