CWC 2023: மிஷன் உலகக் கோப்பை ஆரம்பம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கோலி – ரவிச்சந்திரன் அஸ்வின்!

By Rsiva kumar  |  First Published Oct 1, 2023, 3:51 PM IST

கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் விராட் கோலி இணைந்து 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.


இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் நடக்க இருக்கிறது. வரும் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று 45 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. அதன் பிறகு 2 அரையிறுதிப் போட்டி மற்றும் ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தமாக 48 போட்டிகள் நடத்தப்படுகிறது.

CWC 2023: 48 ஆண்டுகால வரலாற்றில் 2ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி கோலி, அஸ்வின் சாதனை படைப்பார்களா?

Tap to resize

Latest Videos

சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, அகமதாபாத் என்று 10 மைதானங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதையடுத்து, அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.

CWC 2023:ஆரோன் பிஞ்ச் தவிர சீனியர் வீரர்களின் கணிப்பில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வாய்ப்பு

மேலும், அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேல் இடம் பெற்றிருந்த நிலையில், அவர் காயம் காரணமாக நீக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

2019 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.

2015 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், முகமது ஷமி ஆகியோர் இந்த உலகக் கோப்பையிலும் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அக்‌ஷர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.

முதல் முறையாக தனிநபர் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்று அதிதி அசோக் சாதனை – இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

2011 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்கள்:

விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்….

கடந்த 2011 ஆம் ஆண்டு தான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதில், விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் இணைந்து 2023 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட இருக்கின்றனர்.

துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!

இந்த நிலையில், தான் இவர்களது காம்போவை சுட்டிக் காட்டிய பிசிசிஐ டுவிட்டரில், புதிதாக மிஷன் உலகக் கோப்பை ஆரம்பம் என்ற பெயரில் போஸ்டரில் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விராட் கோலி பழைய மற்றும் புதிய ஜெர்சியுடனு, ரவிச்சந்திரன் அஸ்வின் பழைய (2011 உலகக் கோப்பை ஜெர்சி) மற்றும் புதிய ஜெர்சியுடனும் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி அடித்த மிட்செல் ஸ்டார் – வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்!

 

Batch of 2011 ➡️ Batch of 2023

Virat Kohli 🤝 R Ashwin

𝗠𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗪𝗼𝗿𝗹𝗱 𝗖𝘂𝗽 𝗕𝗲𝗴𝗶𝗻𝘀 🏟️ | pic.twitter.com/AfUJeL0nas

— BCCI (@BCCI)

 

click me!