CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிராஜ் தான் சிறப்பாக பந்து வீசுவார் – டேல் ஸ்டெயின்!

By Rsiva kumar  |  First Published Oct 1, 2023, 1:57 PM IST

கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய வீரர் முகமது சிராஜ் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டைய கிளப்ப்வாங்க என்று முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்தப் போட்டியானது சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ என்று 10 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

CWC 2023:ஆரோன் பிஞ்ச் தவிர சீனியர் வீரர்களின் கணிப்பில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு வாய்ப்பு

Tap to resize

Latest Videos

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 2 வார்ம் அப் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த உலகக் கோப்பை போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

முதல் முறையாக தனிநபர் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்று அதிதி அசோக் சாதனை – இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!

இந்த நிலையில், இந்த உலகக் கோப்பையில் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்கள் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெல்ல வேண்டுமென்றால், முகமது சிராஜின் பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும். இரண்டாவதாக தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கஜிகோ ரபாடாவை தேர்வு செய்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய நட்சத்திரமாக ரபாடா உள்ளார். இந்த தொடரில் அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி அடித்த மிட்செல் ஸ்டார் – வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்!

மூன்றாவதாக பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷாகீன் அஃப்டிரியை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த தொடரில் ஷாகீன் அஃப்ரிடி முதல் 10 ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினால், பாகிஸ்தான் டிராபியை கைப்பற்ற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் ஷாகீன் அஃப்ரிடி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

நான்காவதாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்டை குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக சிறப்பாக பந்து வீசி வரும் போல்ட் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். கடந்த மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போல்ட் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ஆகையால், இந்த உலகக் கோப்பை தொடரில் போல்ட் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!

இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட். இந்தியாவிற்கு எதிராக சிறப்பாக பந்து வீசு ஆற்றல் கொண்டவர். இவரது தாக்கம் இந்த உலகக் கோப்பை தொடரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேல் டெயினின் இந்த கருத்து கணிப்பு பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

click me!