நெதர்லாந்து அணிக்கு எதிரான 5ஆவது வார்ம் அப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிட்செல் ஸ்டார் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடவில்லை. ஆதலால், அவரது ஃபார்மில் பிரச்சனை இருக்கும் என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. இந்தியாவிற்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறாத ஸ்டார்க், 3ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடி விக்கெட் கைப்பற்றினார்.
Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!
இதைத் தொடர்ந்து உலகக் கோப்பைக்கான வார்ம் அப் போட்டியில் நேற்று நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில், ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோஸ் இங்கிலிஸ் டக் அவுட்டில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி 28 ரன்களில் வெளியேறினார்.
ICC Mens Cricket World Cup 2023: உலகக் கோப்பைக்கு முன்னதாக காயமடைந்த டாப் 10 பிளேயர்ஸ்!
கேமரூன் க்ரீன் 34 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 24 ரன்னும் எடுத்தனர். இந்த வார்ம் அப் போட்டியில் ஆஸ்திரேலியா பல மாற்றங்களை செய்தது. இதையடுத்து நெதர்லாந்து பேட்டிங் ஆடியது. இதில், முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். அவர், 5ஆவது மற்றும் 6ஆவது பந்தில் அடுத்தடுத்து விக்கெட் எடுத்தார். நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் மேக்ஸ் ஓ'டவுட், டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வெஸ்லி பாரேசி கோல்டன் டக்கில் வெளியேறினார். அதன் பிறகு மீண்டும் 3ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பாஸ் டி லீட் விக்கெட்டை கைப்பற்றினார். அவரும் கோல்டன் டக்கில் வெளியேறினார். இதன் மூலமாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதோடு, 3 பேட்ஸ்மேனும் கோல்டன் டக்கில் வெளியேறியுள்ளனர். எனினும், நெதர்லாந்து வீரர் கோலின் அக்கர்மேன் மட்டும் நிலையாக நின்று ரன்கள் சேர்த்தார். அவர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எனினும், நெதர்லாந்து 14.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டியானது கைவிடப்பட்டது. வார்ம் அப் போட்டி என்பதால், வெற்றி, தோல்வி என்பது எதுவும் இல்லை. எனினும், காயத்திலிருந்து மீண்டு வந்த மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசு ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதன் மூலமாக இந்திய அணிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?
இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த ஆஸ்திரேலியா 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.