இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வார்ம் அப் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இத்தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் வார்ம் அப் போட்டியில் விளையாடி வருகின்றன. நேற்று இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலாக நடந்த முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான வார்ம் அப் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில், நியூசிலாந்து அபாரமாக வெற்றி பெற்றது. இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது வார்ம் அப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், அதன் பிறகு ஒரு பந்து கூட வீச முடியாமல் மழை குறுக்கீடு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், போட்டியானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானை வீழ்த்தி ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுமே வலுவான அணிகள். இங்கிலாந்து நடப்பு சாம்பியன் என்றால், இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணி. இரு அணிகளுமே ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில், உலகக் கோப்பைக்குள் எண்ட்ரி கொடுக்கின்றன. இரு அணிகளும் தலா 106 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 57 போட்டிகளிலும், இங்கிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதுவே ஹோம் மைதானங்களில் 33 போட்டிகளிலும், அவே மைதானங்களில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று இங்கிலாந்து 23 ஹோம் மைதான போட்டிகளிலும், 17 அவே மைதான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், உலகக் கோப்பையில் மட்டுமே நடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 3 போட்டியிலும், இங்கிலாந்து 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மட்டுமே டையில் முடிந்துள்ளது.
IND vs ENG Warm Up Match: 4ஆவது வார்ம் அப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியது. இதே போன்று நியூசிலாந்திற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.