மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?

Published : Sep 30, 2023, 06:03 PM IST
மீண்டும் அப்பாவாகும் விராட் கோலி – கர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா சர்மா?

சுருக்கம்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் மீண்டும் பெற்றோர்களாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இவர்களுக்கு வாமிகா பிறந்தாள். தற்போது வாமிகாவிற்கு 2 வயதாகும் நிலையில், அனுஷ்கா சர்மா மாசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விராட் கோலி மீண்டும் அப்பாவாக போவதாக தகவல் தெரிவிக்கின்றது.

பாகிஸ்தானை வீழ்த்தி ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியா!

எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தற்போது இந்தியாவில் 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. வரும் 5 ஆம் தேதி தொடங்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

 

ஆசிய விளையாட்டு 2023: கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா-ருதுஜா ஜோடி வெற்றி; இந்தியாவிற்கு 9ஆவது தங்கம்!

இந்தப் போட்டி வரும் 8 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து வரும் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG Warm Up Match: 4ஆவது வார்ம் அப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை!

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!