இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

Published : Jan 06, 2023, 02:06 PM IST
இந்திய கிரிக்கெட்டின் ஹீரோ: இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய கபில் தேவ் பிறந்த நாள் இன்று!

சுருக்கம்

முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் ஹீரோ கபில் தேவ் இன்று தனது 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1959 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகாரில் பிறந்தவர் கபில் தேவ். கடந்த 1975 ஆம் ஆண்டு நடந்த உள்ளூர் போட்டிகளில் ஹரியானா அணியில் இடம் பிடித்திருந்த கபில் தேவி, பஞ்சாப் அணியை 63 ரன்களில் சுருட்டி, ஹரியானாவை வெற்றி பெறச் செய்தார். கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் கபில் தேவ் அறிமுகமானார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றினார். இளம் வயதில் உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை கபில் தேவ் பெற்றார்.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையையும் கபில் தேவ் பெற்றிருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகள் கைப்பற்றியதோடு, 5000 ரன்கள் எடுத்த ஒரேயொரு வீரர் என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர்.

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையில் இந்திய அணியின் பயிற்சியாளராக திகழ்ந்துள்ளார். கடந்த 1982 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 1991 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வாங்கியிருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் ஹரியானா அணியில் இடம் பெற்றிருந்த கபில் தேவ் டெல்லி அணிக்கு எதிராக முதல் முறையாக தனது சதத்தை பதிவு செய்தார். இந்தப் போட்டியில் அதிகபட்சமாக 193 ரன்கள் வரையில் எடுத்துள்ளார்.

இந்தியாவின் 79ஆவது கிராண்ட் மாஸ்டரான 15 வயதான தமிழக செஸ் வீரர் பிரனேஷ்!

கிட்டத்தட்ட 356 போட்டிகளில் பங்கேற்றுள்ள கபில் தேவ் 9031 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு, 687 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். ஒரு டெஸ்ட் போட்டியை கூட காயம் காரணமாக பங்கேற்காமல் விட்டதில்லை. 9 விக்கெட்டுகள் ஆன நிலையில் பாலோ ஆன் தவிர்க்க இந்திய அணி போராடிய போது கபில் தேவ் 6,6,6,6 என்று அடித்து இந்திய அணியை காப்பாற்றினார்.

முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!

ரஞ்சி டிராபியையும் முதல் முறையாக கைப்பற்றினார். இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், கிரிக்கெட்டின் ஹீரோ என்று அழைக்கப்படும் கபில் தேவ் இன்று தனது 64ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கபில் தேவிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் கபில் தேவிற்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!