டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

By Rsiva kumarFirst Published Jan 6, 2023, 12:03 PM IST
Highlights

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் ரோகித் சர்மா தான் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. 3டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடந்து டி20 போட்டிகளில் அதிக முறை சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் ரோகித் சர்மா நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார்.

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளில் மட்டும் மொத்தமாக 42 சிக்சர்கள் விளாசியுள்ளார். இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா 38 சிக்சர்கள் விளாசி 2ஆவது இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பல்பிர்னி 35 சிக்சர்கள் அடித்து 3ஆவது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் 28 சிக்சர்கள் அடித்துள்ளார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 28 சிக்சர்கள் அடித்து கடைசி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 79ஆவது கிராண்ட் மாஸ்டரான 15 வயதான தமிழக செஸ் வீரர் பிரனேஷ்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா 6 சிக்சர்கள் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் உள்பட 56 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்துள்ளார். 3டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!

click me!