இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 27.05.2023

By Dinesh TGFirst Published May 27, 2023, 7:55 AM IST
Highlights

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 27.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.
 

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் திமுக தலைமைக்கு புகார் சென்றதை அடுத்து காஜா நஜீரின் பதவி பறிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செஞ்சி மஸ்தான்

அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கொந்தளிக்கும் ஓபிஎஸ்..!

அங்க தொட்டு.. இங்க தொட்டு... தளபதி தலையிலேயே கை வச்ச பயில்வான்! விக்கு மண்டைனு பங்கம் பண்ணும் - வீடியோ! தளபதி விஜய் விதவிதமான விக் வைத்து நடித்து வருவதாக கூறி பங்கம் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

பயில்வான் ரங்கநாதன்.

1947 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செல்கோல் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் விலையின் படி 18 லட்சம் என்று தெரிவித்துள்ளார்.

செங்கோல் விலை...

மும்மொழிக் கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை

குஜராத்தை தலைமையிடமாக கொண்டது அமுல் நிறுவனம். இந்நிறுவனம் தங்களது விற்பனையை நாடு முழுவதும் செய்து வருகின்றன. இந்நிலையில் அமுல் தயாரிப்பான லஸ்ஸி காலாவதி தேதிக்கு முன்னரே கெட்டுப் போனதாகவும், அதில் பூஞ்சை படர்ந்து இருப்பதாக வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அந்நிறுவனம் மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

லஸ்ஸியில் பூஞ்சை

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் இர்ஃபான்

மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார். விதிமுறைகளை சிறப்பாக செயல்படுத்த அறிவுத்தல்!!

செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ

தமிழகத்தில் எப்போது சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. வேலுமணி

செங்கோலை நேருவின் கைத்தடி என காங்கிரஸ் குறிப்பிட்டு அவமதித்து விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா பதிலடி

ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா மோசடி வழக்கு

 

click me!