பிரபல யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழப்பு… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

famous youtuber irfan car met accident and women death

செங்கல்பட்டு அருகே பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் என்ற பகுதியில் நேற்று இரவு பிரபல யூடியூபர் இர்பானின் பென்ஸ் கார் மோதியதில் பத்மாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பத்மாவதியின் உடலை கைப்பற்றிய போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் ஹோட்டலில் 4 வயது குழந்தை மது அருந்தும் நபர்களுடன் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சி!

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் அதன் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதல்கட்டமாக, அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் அசாருதின் என்பது  தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம்... விதிமுறைகளை சிறப்பாக செயல்படுத்த அறிவுத்தல்!!

மேலும் அந்த கார் யூடியூபர் இர்ஃபானுக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த விபத்து நடந்தபோது அவர் அதில் பயணித்து இருக்கிறாரா அல்லது அவர் ஒட்டி இருக்கிறாரா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விபத்து நடந்த இடத்தில் இர்ஃபானை பார்த்ததாக போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் அளித்தாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த ஒரு சில நாட்களில் யூடியூபர் இர்பானின் கார் மோதிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios