இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 22.05.2023

Published : May 22, 2023, 07:50 AM IST
இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 22.05.2023

சுருக்கம்

இன்றைய முக்கிய செய்திகள்: Top News Today 22.05.2023 | நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைந்த தொகுப்பை இங்கே காணலாம்.

மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது கூடங்களுக்கு இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் திமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஷ்யாம் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஷ்யாம் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 40 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. அதனால், மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு அறிவிப்பாகவே முடிந்து விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் வேதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படம் குறித்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தின் கதை குறித்த தகவலும் கசிந்துள்ளது. அதாவது இப்படம் போலி என்கவுண்டர் நடத்தப்பட்ட ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்தே எடுக்கப்பட உள்ளதாம்.

ரஜினியின் 170 ஆவது படத்தின் கதை

தஞ்சையில் மது அருந்தி உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தஞ்சையில் பாரில் மது அருந்திய 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

திடுக்கிடும் தகவல்!!

கோவை கடையில் விற்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாகக் கூறி வன்மத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட நபர்கள் காவல்துறையிடம் சிக்கியுள்ளனர்.

பிரியாணியில் கருத்தடை மாத்திரை?

வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து செய்ய தெலங்கானா அரசு திட்டமிட்டு வருகிறது.

வரதட்சணை

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை கடுமையாக விமர்சித்து புதுச்சேரி முழுதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழிசையை விமர்சிக்கும் போஸ்டர்கள்

டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

பப்புவா நியூ கினியாவின் பிரதமர் பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வெளிநாட்டு விருந்தினரையும் வரவேற்பதில்லை. இது அவர்களின் பாரம்பரியம். ஆனால் இந்த பாரம்பரியத்தை இந்திய பிரதமர் மோடிக்காக அவர் தளர்த்தியுள்ளார்.

பப்புவா நியூ கினியாவில் மோடி

கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றுவிட்டதால், கே.சி.ஆர். கண்ட கனவுகள் கைகூடாதவையாக மாறிவிட்டன.

From The India Gate

ஜப்பானில் இன்று நடந்த சீகோ கோல்டன் கிராண்ட் பிரிக்ஸில் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்லி சிங் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை

ஷைலி சிங் வெண்கலம்

கோவை பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த மது பாரில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை தட்டி கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நடிகை மீனா 2 மணி நேரத்திற்கு 13 லட்சம் சம்பளமாக வாங்கியதாக நடிகரும், பத்திரிக்கையாருமான பயில்வார் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மீனா 40 - 13 லட்சம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் டி.பி.எம். மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக செயலாளர் மாற்றம்
 

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!