From The India Gate: கர்நாடக தேர்தலில் கலைந்த கனவுகளும் பூனையாக மாறிய சிங்கமும்!

By SG Balan  |  First Published May 21, 2023, 7:00 PM IST

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 26வது எபிசோட்.


கலையும் கனவுகள்:

கர்நாடக தேர்தல் முடிவுகள் தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவின் கனவை குலைத்துள்ளன. தேசிய கட்சிகளுக்கு மாற்றாக காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கு தலைவராகும் ஆசையுடன் பல கூட்டங்களைக் கூட்டினார்.

Latest Videos

ஆனால், காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததால், கே.சி.ஆரின் லட்சியம் முறிந்துபோனது. காங்கிரஸ் ஆட்சியின் பதவியேற்பு விழாவில் பாஜக அல்லாத பல முதல்வர்கள் கலந்துகொண்டது, கர்நாடகா தேர்தல் வெற்றிக்குப் பிறகு காங்கிரஸ் பெற்றுள்ள எழுச்சியை உறுதி செய்துள்ளது.

கே.சி.ஆர். முயற்சி செய்த இன்னொரு அரசியல் சூத்திரம், ஹெச்.டி. குமாரசாமியுடன் கூட்டணி அமைப்பது. தொங்கு சட்டசபை அமைந்தால் குமாரசாமி கிங் மேக்கராக மாறுவார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

ஆனால் அந்தத் திட்டத்துக்கும் வேலை இல்லாமல் போனது. தெலுங்கானாவில் பாஜகவைப் போலவே தனக்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றுவிட்டதால், கே.சி.ஆர். கண்ட கனவுகள் கைகூடாதவையாக மாறிவிட்டன. இந்த நிலைமையில் சித்தராமையா பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியலில் கே.சி.ஆர். இல்லை என்பதில் ஆச்சரிய ஏதும் இல்லை.

Exclusive : அயோத்தியில் ராமர் கோவில்! - உருவாகிறது ஒரு புதிய சகாப்தம்!

த்ரில்லான முடிவு:

பரபரப்பான டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஓவர்கள் வீசப்படும் நேரத்தில் இருப்பதைப் போன்ற சஸ்பென்ஸும் பதற்றமும் பெங்களூருவின் ஜெயநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் மையத்தில் காணப்பட்டது.

பாஜகவின் சிகே ராம மூர்த்தியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடத் தொடங்கியபோதும், பாஜக மறுவாக்கு எண்ணிக்கையைக் கோரியது. பெங்களூரு தெற்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வாக்கு எண்ணும் அறைக்குள் சென்று வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரினார்.

வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் பாஜக தலைவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பார்ம், ஐடி கார்டு ஏதும் தேவை இல்லை: ஸ்டேட் வங்கி அறிவிப்பு

மறு வாக்கு எண்ணிக்கையில் ராம மூர்த்தி 17 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா ரெட்டியை விட முன்னிலை பெற்றார். இப்போது காங்கிரஸ் சார்பில் இன்னொரு முறை வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரப்பட்டது. ஆனால், அதில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் ராம மூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

சௌமியாவின் குடும்பத்திற்கு ஒரே ஒரு ஆறுதல் கிடைத்தது. ஜெயநகருக்கு பக்கத்துத் தொகுதியான பிடிஎம் லேஅவுட் தொகுதியில் அவரது தந்தை ராமலிங்க ரெட்டி வெற்றி பெற்றார்.

கர்நாடகாவில் நடந்த தேர்தலில் வேறு சில வேட்பாளர்களும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகன் தினேஷ் குண்டுராவ், காந்திநகர் தொகுதியில் பாஜகவின் சப்தகிரி கவுடாவை எதிர்த்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிக்கமகளூருவில் உள்ள சிருங்கேரி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் ஜீவராஜ் 201 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ ராஜு கவுடாவைக் காப்பாற்றியது தபால் வாக்குகள் தான்.

கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ் 2023: நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெண்கலம் வென்று சாதனை

பூனைக்குட்டியான சிங்கம்:

‘கர்நாடக சிங்கம்’ ஒன்று தன் கர்ஜனையை இழந்துவிட்டது. அண்டை மாநிலமான தமிழகத்தில் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தாலும், கர்நாடகத் தேர்தலின்போது இந்தத் தலைவருக்கு கணிசமான பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால், மூத்த தலைவர்களை அவர் முற்றிலும் புறக்கணித்ததும், தொகுதி ஒதுக்கீட்டில் அதிகம் தலையிட்டதும் பாஜகவின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பல மூத்த தலைவர்கள், இவர் இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.

தேர்தலில் பெரும் சரிவை எதிர்கொண்ட கர்ஜிக்கும் சிங்கம் கொஞ்ச காலத்துக்கு அடக்கி வாசிக்கலாம் என்று அமைதியாக பூனைக்குட்டி போல ஒதுங்கி இருக்கிறது.

கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு 244 முறை இயக்கப்படும் 50 சிறப்பு ரயில்கள்

குஸ்தியும் தோஸ்தியும்:

புதிய கர்நாடக அரசின் பதவியேற்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளாதது பேசுபொருளாகியுள்ளது. அவர் தன்னை எதிர்க்கட்சி ஒற்றுமையின் சின்னமாகச் சித்தரித்துக்கொண்டாலும், அவரை அழைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பலர் கலந்துகொண்டனர். சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் தோழர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தலைவர் டி. ராஜா ஆகியோரும் பதவியேற்பு விழாவில் இடம் பிடித்தனர்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக இடதுசாரி தேசியத் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் கைகோர்த்துக்கொண்டிருந்தபோது, நேர் முரணான சம்பவம் கேரளாவில் நடந்தது. திருவனந்தபுரத்தில் இடதுசாரி அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். கூட்டணி போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது.

இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் டிவியில் ஒரே நேரத்தில் ஒளிரப்பாகிக்கொண்டிருந்து வெங்கையா நாயுடு சொன்னதை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. “கேரளாவில் குஸ்தி, டெல்லியில் தோஸ்தி!”

பீகாரை சேர்ந்தவர் அடித்து கொலை… கேரளாவில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்!!

click me!