பல்வேறு சட்ட சிக்கல்களை கடந்து இறுதியாக அயோத்தியில் ராமல் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி கோவின் கட்டிட கலையின் பிரம்மாண்டத்தை காண லட்சக்கணக்கான மக்கள் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்து மற்றும் முஸ்லீம் மத மோதல் என்றாலே பலரின் நினைவுக்கு வருவது அயோத்தியா தான். 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட காரணத்தால் இந்து - முஸ்லீம் மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. எனினும், அயோத்தியா வரலாறு இந்து முஸ்லீம் மதத்தினர் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டை இட்டதில் இருந்தே துவங்குகிறது. இந்த வரலாற்றை இரண்டு மதங்களை சேர்ந்த பிரிவினை வாதிகள் மறக்கடிக்கச் செய்யும் முயற்சியில் காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்டகால சட்டப்போராட்டத்துக்குப்பின், 2019, நவம்பர் 9ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில்கட்ட வழி பிறந்தது. இதையடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ராமல் கோவிலுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட 40கிலோ வெள்ளி செங்கலை ராம ஜென்ம பூமியில் பதித்து கோவில் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, அயோத்தியில் 2024 ஆம் ஆண்டுக்குள் பிரமாண்டமான கோவிலை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் வேகமாக உழைத்து வருகிறார்கள். மில்லியன் கணக்கான பக்தர்களின் புதிய சகாப்தத்திற்காக இரவு, பகல் பாராமல் நூற்றுக்கணக்கானோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் அதீத பொறியியலின் சின்னமாக ராமர் கோவில் உருவாகிறது. அயோத்தியின் பிரமாண்ட ராமர் கோவில் அதன் கதவுகள் திறக்கும் போது மில்லியன் கணக்கான பக்தர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது. கைவினைஞர்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட பன்சி பஹாட் கல்லைத் கட்டுக்கோப்பாக செதுக்கி வருகிறார்கள். மேலும், ராமர், சீதை சிலைகளை வடிக்க இரண்டு பெரும் பாறைகளை நேபாள அரசு அனுப்பியுள்ளது. உலோகத்தால் ஆன சிவ தனுசு ஒன்றையும் நேபாளம் வழங்க உள்ளது.
புதிய ராமர் கோயிலில் 9 அடி உயரத்தில் ராமர் சிலையை நிர்மாணிக்கப் பட இருக்கிறது. சூரிய ஒளிக் கதிர்கள் ராமர் தலையைத் தொடும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக சிஐஎஸ்ஆர், சிபிஆர்ஐ, மத்திய வானியியல் மற்றும் வான் இயற்பியல் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
2.7 ஏக்கர் பரப்பளவில் 57,400 சதுர அடியில் கோயில் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க், 'தி சாகா ஆஃப் அயோத்தி: எ நியூ எரா டான்ஸ்' - ராமர் வாழ்க்கை வரலாறு குறித்த கதையை ஆராயும் இந்த சிறப்பு ஆவணப்படம் விளக்குகிறது. கோவில் உருவானது மற்றும் பொறியாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் எவ்வாறு ராமர் மற்றும் அயோத்தியின் மகிமையை அதன் அழகிய வடிவத்திற்கு உயிர் கொடுக்கிறார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் விளக்குகிறது.