கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் பலி! செந்தில் பாலாஜி,ஸ்டாலின் குடும்பமே பொறுப்பு! ஷ்யாம் கிருஷ்ணசாமி

மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் மது கூடங்களுக்கு இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் திமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்படுகின்றது. 

tasmac bar death issue... Shyam Krishnasamy slams dmk government

மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மது கூடங்களுக்கு இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் திமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஷ்யாம் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசலில் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கி குடித்த மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசை கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- உங்களால முடியலனா சொல்லுங்க.. 24 மணி நேரத்தில் 500 மதுக்கடைகள் லிஸ்ட் கொடுக்க நாங்க ரெடி.. அன்புமணி ராமதாஸ்.!

tasmac bar death issue... Shyam Krishnasamy slams dmk government

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாரில் மது குடித்தவர் உயிரிழப்பு. தமிழகம் முழுவதும் திமுகவினரால் ஆயிரக்கணக்கான பார்கள் மற்றும் ‘மனமகிழ் மன்றங்கள்’ மூலம் கள்ளச்சந்தையில் 24 மணிநேரமும் மது விற்கப்படுகிறது… ஏற்படும் உயிரிழப்புகள் எல்லாம் செந்தில் பாலாஜி மற்றும் ஸ்டாலின் குடும்பமே பொறுப்பு!

 

 

 

மனமகிழ் மன்றங்கள்’ என்ற பெயரில் மது கூடங்களுக்கு இந்த ஆட்சியில் சுமார் 2000 உரிமங்கள் திமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற ரூ.50 லட்சம் லஞ்சம் பெறப்படுகின்றது. இந்த மன்றங்களில் பெரும்பாலும் கள்ளச்சந்தை மதுவே விற்கப்படுகிறது.  365 நாட்கள், 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது!  என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;-  தஞ்சையில் மது அருந்தி 2 பேர் உயிரிழந்த விவகாரம்... பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios