நெல்லை மாவட்ட திமுக செயலாளர் மாற்றம்; அப்துல் வஹாப் நீக்கப்பட்டு மைதீன் கான் நியமனம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியில் இருந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் டி.பி.எம். மைதீன் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tirunelveli District DMK Secretary Abdul Wahab sacked, T.P.M. Mohideen Khan named as new Secretary

கடந்த ஆண்டு திமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 72 மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அண்மையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அந்தக் கூட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தஞ்சையில் அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்திய 2 பேர் மரணம்

abdul wahab, TPM Mohideen khan

பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் கட்சிப்பணிகளைப் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறினால் பணிநீக்கம் செய்யப்பட நேரிடும் என்றும் ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இந்நிலையில், இன்று திடீரென நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் பணிநீக்கம் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான டி.பி.எம். மைதீன் கான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பார்ம், ஐடி கார்டு ஏதும் தேவை இல்லை: ஸ்டேட் வங்கி அறிவிப்பு

Tirunelveli District DMK Secretary Abdul Wahab sacked, T.P.M. Mohideen Khan named as new Secretary

இதேபோல, மதுரையைச் சேர்ந்த மிசா பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிசா பாண்டியன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமையகமான அறிவாலயம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை திமுகவினர் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பேசப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறையில் தென் மாவட்டங்களுக்கு 244 முறை இயக்கப்படும் 50 சிறப்பு ரயில்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios