
வரதட்சணை வாங்கினால் மாணவரின் கல்லூரி சான்று ரத்து செய்ய தெலங்கானா அரசு திட்டமிட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கொலை அல்லது தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் தெலங்கானாவில் வரதட்சணை பிரச்னையால் கடைசி நிமிடத்தில் திருமணம் ரத்தான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்கும் விதமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சட்ட வல்லுனர்களுடன் சில நாட்களாக ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: தொலைத்துக் கட்டிவிடுவேன்! குமரி சோதனைச் சாவடியில் காவலர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய அமைச்சர்!
இதன்தொடர்ச்சியாக வரதட்சணை கொடுமைகளை தடுக்கும் வகையில் கல்லூரி பருவத்திலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி பருவம் முடிந்து புதிதாக கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்கள் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.
இதையும் படிங்க: கலெக்சன் கல்லா கட்டும் அக்கா... அக்கா... புதுவை முழுவதும் தமிழிசையை விமர்சிக்கும் போஸ்டர்கள்
அதில், எனது திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன், வரதட்சணை என்பது சட்டப்படி குற்றம். அவ்வாறு நான் வரதட்சணை பெற்றால் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மீறி எதிர்காலத்தில் வரதட்சணை பெற்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மாணவரின் கல்லூரி சான்றிதழ் ரத்து செய்யப்படும் வகையில் தெலங்கானா அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.