டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் நடக்குது? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 29, 2018, 2:00 PM IST
Highlights

டெங்கு வைரஸ் உள்ள கொசு, ஒருவரை கடிக்கும்போது அதன் எச்சில் வழியாக வைரஸ் மனித உடம்புக்குள் நுழைந்துவிடும். அந்த வைரஸ் வெள்ளை இரத்த அணுக்களைப் பிடித்துக் கொண்டு பின்னர் மெதுவாக வெள்ளை இரத்த அணுக்களுக்குள் நுழையும். அதன்பிறகுதான் வைரஸ் தன் எண்ணிக்கையைப் பெருக்கும். 
 
டெங்கு

அப்படி நுழையும் வைரஸுடன், வெள்ளை இரத்த அணுக்கள் போர் புரியும். இதனால் கடுமையான காய்ச்சல், உடம்புவலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும். கடுமையான நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு கல்லீரல், எலும்பு மஜ்ஜை போன்ற முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படும். 

அதுமட்டுமா? இரத்த நாளங்களில் இரத்த அணுக்களைச் சுமந்துச் செல்லும் நிறமற்ற திரவம், தனியாகப் பிரிந்துச் சென்று, உடம்பில் இருக்கும் புழைகளில் சென்று தங்கிவிடும். இதனால் முக்கிய உறுப்புகளுக்கு இரத்தம் செல்லாமல் தடைப்பட்டுவிடும்.

இந்த எலும்பு மஜ்ஜை செயற்பிறழ்ச்சியால் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும். இந்தத் தட்டணுக்கள்தான் இரத்தம் உறைவதற்கு துணை புரிகிறது. இது எண்ணிக்கையில் மிகவும் குறையும்போது இரத்தம் உறைய முடியாமல் இரத்த பெருக்கு அதிகமாகும். இப்படிதான் இந்த கொசுக்கள் டெங்குவை நமக்குள் விதைக்கின்றன.

click me!