சர்க்கரை நோயாளிகள் வேறு வழியில்லாமல் சர்க்கரையை தவிர்ப்பது உண்டு. ஆனால் 30 நாட்கள் சர்க்கரை நிறைந்த பொருட்கள் எதையும் சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது தெரிந்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது
இன்றைய உலகத்தில், சர்க்கரை (Sugar) இல்லாத ஒரு நாள் கழிப்பதே சவாலாகி விட்டது. டீ, காபி, பிஸ்கட், கேக், சாஸ், ஜூஸ், ஐஸ்க்ரீம், சாக்லேட் என ஏதாவது ஒரு வடிவத்தில் நாம் சர்க்கரையை சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். அதனால் நம்முடைய உணவில் சர்க்கரை இல்லையென சொல்லவே முடியாது. அதிகப்படியான சர்க்கரை உபயோகம் நம் உடலுக்கே மெல்லிய விஷம் போல. முதலில் இனிமையாகத் தோன்றும்; ஆனால் நாளடைவில் அது தான் உடல் அழிவுக்கு காரணமாகிறது.
அதை தடுக்கும் ஒரே வழி, அதை முற்றிலும் தவிர்ப்பது. ஆனால் சர்க்கரை இல்லாமல், சர்க்கரை சாப்பிடாமல் இருக்க முடியுமா? இதை சாத்தியமாக்க இப்போது பலரும் முயற்சிக்கும் "30 Days No Sugar Challenge" நம் உடலை சுத்தம் செய்ய ஒரு இயற்கையான டிடாக்ஸ் மாதிரி இருக்கும்.
30 நாட்கள் No Sugar Challenge – முழுமையான நன்மைகள் :
1. உடல் எடையில் மாற்றம்:
- இது அதிகப்படியான insulin release-ஐ தூண்டும். இதனால் fat storage குறையும். சர்க்கரை தவிர்ப்பது, fat burn க்கு உதவும். உடல் எடை குறைப்பிற்கு இது உதவும்.
- பலர் 30 நாட்களில் 2–5 கிலோ வரை குறைக்கிறார்கள். அதோடு சரியான உணவும் சேர்ப்பது அவசியம்.
2. தோல், முகம், அழகு பளிச்சென்று மாறும் :
- சர்க்கரை கலந்த உணவுகளால் தோலில் collagen உடைந்து, wrinkles, dullness உருவாகிறது.
- 2 வாரங்களில் பிம்பிள் குறையும்.
- 3 வாரங்களில் தோலில் glow தெரியும்.
- 30 நாட்களில் உங்கள் முகம் பளிங்கு போல் மின்னுவதை அனைவரும் சொல்லுவார்கள்.
3. சோர்வில்லாமல் இருக்க முடியும்:
- சர்க்கரை உடனடியாக energy கொடுக்கும். ஆனால் உடனடியாக மீண்டும் சக்தியை குறைத்து விடும்.
- சர்க்கரை இல்லாமல் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்வதால் சாப்பிடாமலும் கூட நீண்ட நேரம் சோர்வு இல்லாமல் இருக்க முடியும்.
- ஆனால் ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்கு 3 வேளை உணவு மட்டுமே போதும்.
- இடையே snack craving குறையும்.
மேலும் படிக்க: இந்த 3 பொருட்களை மென்று சாப்பிட்டால்... உடல் எடை சரசரவென்று குறையும்
4. மனதில் அமைதி ஏற்படும் :
அதிகப்பட்டியான சர்க்கரையால் மனதில் அழுத்தம், கவலைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
முதல் வாரம் No sugar மனம் தெளிவாக இருக்கும்.
2 வாரம் - தூக்கம் நன்றாக வரும்
3 வாரம் - மன அழுத்தம் குறையும்
5. உணவில் உள்ள உண்மை சுவையை அனுபவிப்பீர்கள் :
- பசிப்போக அந்த இயற்கையான புளிப்பு, உப்பு, கார சுவைகள் உணர முடியும்.
- பழங்களில் இருக்கும் இயற்கை இனிமை (natural fructose) மிக இனிமையாக தோன்றும்.
தவிர்க்க வேண்டியவை :
- வெள்ளை சர்க்கரை, பாக்கெட் சர்க்கரை
- பிஸ்கட், கேக், பாஸ்தா
- பாக்கெட் ஜூஸ், energy drinks
- சாக்லேட், ஐஸ்க்ரீம்
- பால் பவுடர், பிரசரிக்கப்பட்ட வணிக உணவுகள்
இவையெல்லாம் label-ல் sugar, glucose, syrup, fructose, maltose, sucrose என்ற பெயரில் வரும்.
என்ன சாப்பிடலாம் (Approved List):
- பழங்கள் (பேரிக்காய், வாழை, மாதுளை, ஆப்பிள்)
- தேன் (அளவிற்கு), நாட்டு சர்க்கரை, தேத்த பாகு (சில சமயங்களில்)
- க்ரீன் டீ, தேனீரில் எலுமிச்சை
- முட்டை, சாமை, கீரை, பழுப்பு அரிசி
- இளநீர், வெற்றிவேர் நீர்
ஏற்கனவே உப்பும் காரமும் நம்மை நன்றாகக் கையாளும்.
மேலும் படிக்க: நடக்க கூட வேணாம்...உட்கார்ந்த இடத்திலேயே ஈஸியாக உடல் எடையை குறைக்கலாம்
Week-by-Week Body Reaction:
Week 1 - தலைவலி குறைந்து, பசி அதிகமாகும்
Week 2 - Energy stabilize ஆகும், தூக்கம் மேம்படும்
Week 3 - முகத்தில் பளிச், மனம் தெளிவாகும்
Week 4 - எடை குறையும், மனம் தெளிவாக மாறும்
காபி, டீக்கு மாற்று :
- வெந்தயம், இஞ்சி தண்ணீர் - பசிக்கு மாற்று
- எலுமிச்சை சாறு , தேன் - காலை எனர்ஜி பானம்
- சுக்கு, துளசி டீ - immunity, mood balance
- சாமை / குதிரைவாலி உணவுகள் - வாயு கட்டுப்பாடு
இது ஒரு டயட் அல்ல, ஒரு பழக்க மாற்றம்.நம்மை பிழையின்றி வாழ வைக்கும் ஒரு சவால். 30 நாட்கள் முடித்த பிறகு, உங்கள் உடலே நீங்கள் சாப்பிட்டு பழகிய பழைய சர்க்கரையை மறுக்க ஆரம்பித்துவிடும்.