முக்கனிகளில் ஒன்றான மாம்பழங்கள் சம்மரில் அதிகம் கிடைக்கும். இந்த சமயத்தில் அனைவரும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவது உண்டு. சாதாரணமாக மார்பழத்தை சாப்பிடுவதை விட, கோடைக்கு இதமாக பல விதமான பானங்களாக செய்து, ஜில் என செய்து சாப்பிடலாம்.
கோடை வந்தாலே உடனே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் சூடான வெயில், அவற்றை தணிக்க மக்கள் விரு ம்பும் குளிர்ந்த பானங்கள், அதிலும் முக்கியமாக மாம்பழம். இது பழமையானது, சுவையானது, ஆரோக்கியமானதும் கூட. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த பழம்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இந்த கோடையை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் கடக்க, இங்கே 5 வகையான மாம்பழ பானங்கள் — வீட்டிலேயே சுலபமாக செய்து பார்க்கலாம்.
5 மாம்பழ பானங்கள் :
மாம்பழ லஸ்ஸி (Mango Lassi)
தேவையானவை- பழுத்த மாம்பழம், தயிர், தேன்/சர்க்கரை, ஏலக்காய் தூள்
செய்முறை - மாம்பழ துண்டுகள், தயிர், சிறிது தேன், ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து பரிமாறலாம். தயிரின் குளிர்ச்சியும், மாம்பழத்தின் இனிமையும் ஒன்றாக கலந்த refreshing drink ஆக இது இருக்கும்.
மாம்பழ பானகம் (Mango Panakam)
தேவையானவை - மாம்பழம், நாட்டு சர்க்கரை, சுக்கு தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு
செய்முறை - பழத்துடன் நாட்டு சர்க்கரை, சுக்கு தூள், எலுமிச்சை, உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறலாம். தெற்கிந்திய கலாசார பானத்தில் ஒரு இனிப்பு மாம்பழ டச் நிறைந்ததாக இது இருக்கும்.
மேலும் படிக்க: மதுரை ஸ்பெஷல் ஜில் ஜில் ஜிகர்தண்டா – வீட்டிலேயே செய்து அசத்துங்க
மாம்பழ புடிங் மில்க் ஷேக் (Mango Pudding Milkshake)
தேவையானவை -மாம்பழம், பால், மஞ்சள் ஜெல்லி, ஐஸ்க்ரீம் (விருப்பப்படி)
செய்முறை - மாம்பழம், பால் சேர்த்து பிளெண்ட் பண்ணி, கப்பில் ஜெல்லி அடியில், மேல் மில்க் ஷேக் ஊற்றி, ஐஸ்க்ரீம் டாப்பிங் இடலாம்.
பீச் சைடு ஃபீல் தரும் ஜெல்லி மற்றும் ஷேக் செம combo
மாம்பழ நீர் (Raw Mango Summer Cooler)
தேவையானவை: கசக்காத மாங்காய் (raw mango),மிளகு, உப்பு, பச்சை மிளகாய், புதினா
செய்முறை: கசக்காத மாங்காயை வேக வைத்து, உடைத்து, புதினா, உப்பு, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நீர் கலக்கவும்.
உடல் வெப்பத்தை குறைக்கும், வெயிலில் வெளியே செல்வோருக்குத் தேவையான சக்தி!
மேலும் படிக்க: கொங்கு நாட்டு இளநீர் பாயாசம் – வீட்டிலேயே செய்வது எப்படி?
மாம்பழ ஸ்பார்க்க்லர் (Mango Sparkler Drink)
தேவையானவை - மாம்பழ ப்யூரி, சோடா/ஸ்பார்க்லிங் வாட்டர், லைம் சாறு, மஞ்சள் நிற சீனி சிரப்
செய்முறை -மாம்பழ ப்யூரியில் லைம் சாறு, சிறிது syrup, சோடா கலந்தால் restaurant-style cooler தயார்.
பார்டி ஸ்டைலில் குளிர்ச்சியும் ஸ்டைலும் இரண்டும் இணைந்த பானம்!
மிக்ஸியில் மிக நன்றாக அரைத்தால் தான் பானம் க்ரீமியாக இருக்கும்.
சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லை என்பவர்கள் தேன் அல்லது நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம்
குளிர்ந்த நீர்/பால் அல்லது few ice cubes சேர்க்கலாம் சிறந்த சூப்பர் ஃபினிஷ்
மாம்பழம் என்பது சிறந்த சம்மர் பழம் மட்டும் இல்ல, குளிர்ச்சியையும் தரக்கூடிய இயற்கை வளம். இந்த கோடையில் பாட்டிலில் வரும் பானங்களை தவிர்த்து, வீட்டில் செய்யக்கூடிய சுத்தமான, சுவையான, சத்தான பானங்களை முயற்சிக்கலாம்.